கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

கோவையில் ஒரு இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் டிப்ளமோ பார்மஸி படித்துள்ள ஷர்மிளா. இவருக்கு டிரைவிங் மீதுள்ள ஆர்வத்தால் அந்தத் துறையை உதறித் தள்ளிவிட்டு, டிரைவிங்கில் கவனம் செலுத்தினார். முறையாக டிரைவிங் கற்ற ஷர்மிளா, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றார். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது அவரின் கனவு. இருப்பினும் அந்த வாய்ப்பு அவருக்கு உடனடியாகக் கிடைக்காததால், தந்தை மகேஸின் … Read more

சென்னை பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு 

சென்னை: பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சென்னையின் மிக முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்காம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், … Read more

தமிழ்நாடு வானிலை: 15 மாவட்டங்களில் கொட்டும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01.04.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், … Read more

வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காலச் சூழல் காரணமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் காளான்களாக உருவெடுத்துள்ளது. வாடகைத் தாய் சட்டங்கள் பற்றி நீதித்துறை அதிகாரிகள் முழுமையாக அறிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற … Read more

JEE அட்வான்ஸ்டு 2023: ஐ.ஐ.டி மெட்ராஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு கடந்த 5 வருட கட்-ஆஃப் இதுதான்

JEE அட்வான்ஸ்டு 2023: ஐ.ஐ.டி மெட்ராஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு கடந்த 5 வருட கட்-ஆஃப் இதுதான் Source link

#BREAKING | சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! அமலுக்கு வருகிறது தமிழக அரசின் அதிரடி திட்டம்!

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க “சென்னை எல்லைச் சாலை” எனும் பெயரில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், ‘சென்னை எல்லை சாலை’ திட்டம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் சென்னையில் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பாக கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘பீக் … Read more

“புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆரணி மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். Source link

சென்னையில் 9 சந்திப்புகளில் மேம்பாலம்: நெடுஞ்சாலைத் துறை தகவல் 

சென்னை: சென்னையில் 9 சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னையில் 9 சந்திப்புகளில் சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, “பி.டி. … Read more

வார்டு மறுவரையறை: ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, உறுதி அளித்த கே.என்.நேரு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வார்டு மறு வரையறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்து பேசினார். வார்டு மறு வரையறை வேண்டும்! அப்போது கேள்வி பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறு வரையறை செய்ய தமிழக அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். குழு அமைத்து நடவடிக்கை! இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, “தமிழ்நாடு … Read more

உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது..!!

நீலகிரி: உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது. இன்று தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் குதிரை பந்தயத்தில் 550 பந்தய குதிரைகள் பங்கேற்கின்றன. முக்கிய பந்தயமான 1,000 கின்னீஸ் ஏப்.14-ம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்.15-ம் தேதியும் நடைபெறுகிறது. நீலகிரி தங்கக் கோப்பைக்கான பந்தயம் மே 21-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் குவிந்துள்ளனர்.