மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. மாந்திரீக தம்பதி உட்பட 3 பேர் கைது.!

திண்டுக்கல் அருகே, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த மாந்திரீக தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அருள் மணிகண்டன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிகாரம் செய்வதாக கூறி அவரது மனைவியிடம்  தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி  ஆகியோர் 65 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். அருள் மணிகண்டனின்  மனநிலையில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவரது … Read more

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.10-ல் இருந்து ரூ.60 வரை கட்டணம் உயர்வு

செங்கல்பட்டு/சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10-ல் இருந்து, அதிகபட்சமாக ரூ.60 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் கவலைக்கு உள்ளாகி உள்ளனர். நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றுதேசிய நெடுஞ்சாலைகள் திட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் … Read more

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா … Read more

குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.2268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது … Read more

வெற்றியுடன் கணக்கை தொடங்கிய குஜராத்!!

ஐபிஎல் சீசன் 16இல் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியில் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து சென்னை … Read more

மதம்மாற்றி திருமணம் செஞ்சிவச்சீங்க..இப்ப அவன் ஓடிப்போயிட்டான்…பள்ளி வாசலில் பெண் தர்ணா..! கைக்குழந்தையுடன் ஜமாத்திடம் நீதி கேட்டார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதல் கணவன் கைவிட்ட நிலையில், தன்னை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்த பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் நியாயம் கேட்டு தரையில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் முன்பாக புர்கா அணிந்த பெண் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்றிருந்தார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென பள்ளி வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் … Read more

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனாதொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 120-ஐக் கடந்துவிட்டது. அதேபோல, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை … Read more

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல் – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 1) 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம்! நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை … Read more

பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி மன்றக்கூட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் (பொ) வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திடக்கழிவு திட்டத்தின்  கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் தள்ளுவண்டிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்க தேவையான பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி, … Read more