வடமாநில தொழிலாளர் வழக்கில் கைதான மதுரை நீதிமன்றத்தில் பீகார் யூடியூபர் ஆஜர்: விமானத்தில் போலீசார் அழைத்து வந்தனர்

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து, அவதூறு பரப்பிய பீகார் யூடியூபர், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பொய்யான கருத்துக்களையும், போலி வீடியோக்களையும் வெளியிட்டதாக பீகார் மாநிலத்திலுள்ள சச்தக் நியூஸ் என்ற யூடியூப் சேனலின் நிர்வாகி மனீஷ் காஷ்யப் (எ) டி.கே.திவாரி (32) மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.  இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே பீகார் மாநிலம், சாம்பவார் மாவட்டத்திலுள்ள ஜக்தீஷ்பூர் போலீசார், மனீஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 … Read more

ஐபிஎல் விழாவில் ராஷ்மிகா மந்தனா… ஸ்ருதி ஹாசனின் சர்ச்சை புகைப்படம் : டாப் 5 சினிமா

ஐபிஎல் விழாவில் ராஷ்மிகா மந்தனா… ஸ்ருதி ஹாசனின் சர்ச்சை புகைப்படம் : டாப் 5 சினிமா Source link

ரோகிணி திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு! 

நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் மீது, கோயம்பேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியது. இந்த திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கான டிக்கெட்களை,  நரிக்குறவர் இன மக்களுக்கு இலவசமாக சிம்பு ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.  இதனையடுத்து ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க சென்ற நரிக்குறவ இன மக்களை, ‘உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று டிக்கெட் பரிசோதகர் வெளியே அனுப்பினார். … Read more

பிரபல திரையரங்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையங்கில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரை திரையரங்குக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் பிரபலங்கள் பலரும் இந்த தீண்டாமை செயலை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிம்பு ரசிகர்கள் வழங்கிய டிக்கெட்டை வைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றபோது திரையரங்கின் ஊழியர் தங்களுக்கு அனுமதி மறுத்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் … Read more

ஏப்.8-ல் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

கோவை: சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா கூறியுள்ளார். சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக காலை … Read more

ஆந்திரா கோயிலில் தீ

திருமலை: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  கோயிலில் ராம நவமி பூஜைகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதனை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். இந்நிலையில், நிழலுக்காக போடப்பட்டிருந்த பனை ஓலை பந்தல் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். உயிர் சேதம் ஏற்படவில்லை.

#BREAKING | திருவள்ளுரில் அரசு, தனியார் பள்ளிகளை சேந்த மாணவர்கள் அடுத்தடுத்து பலி! சாலைமறியல், போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவன் தமிழ்ச்செல்வன் பலியாகியதாக போலீசார் முதல் கட்ட தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் … Read more

ரூ.420 கோடியில் 24×7 குடிநீர் திட்டம், 25 நவீன தகன மேடைகள்: நகராட்சி நிர்வாகத் துறை புதிய அறிவிப்புகள்

சென்னை: 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய … Read more

Madras HC: ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட அண்ணனுக்கும் சொத்தில் பங்கு? வழக்கை விசாரிக்கலாம்

சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற  மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து வாரிசுரிமை சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது … Read more