நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம்!

நெல்லை: நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரேனும் இருப்பின், ஏப்ரல் 10ம் தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விரைவில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என் நேரு.! 

கடந்த 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டும், மறுநாளான 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்கள்நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதாவது, கடந்த ஆண்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாகவும் இருபத்தெட்டு பேரூராட்சிகள் … Read more

சிறைக்கு 1,000 புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!!

மதுரை மத்திய சிறைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை புது ஜெயில் சாலையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறை நிர்வாகமானது கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் சிறை நூலகம் திட்டம் அங்கு கொண்டு வரப்பட்டது. கைதிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக பல்வேறு தரப்பினர் … Read more

வேலூர் கோட்டையில் பெண்களின் புர்காவை கழட்டச்சொல்லி மிரட்டல்..! வீடியோ வெளியிட்ட 7 பேர் கைது

வேலூர் கோட்டையில் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்களிடம் அந்த உடையை அகற்றக்கூறி வம்பு செய்த வழக்கில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டைக்கு தங்களது ஆண் நண்பர்களுடன் வந்திருந்த இளம் பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த புர்காவை அகற்றுமாறு சிலர் சட்ட விரோதமாக மிரட்டி அவர்களை வீடியோ பதிவு செய்தனர். தாங்கள் ஏன் புர்காவை அகற்ற வேண்டும் என்று ஒரு பெண் உருது மொழியில் … Read more

20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில் 8.62 லட்சம் தெருவிளக்குகள் பராமரிப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை தவிர்த்த 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில் 8.62 லட்சம் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது 20 மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மற்றும் 138 நகராட்சிகளில் 8.62 லட்சம் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 30 மீட்டர் … Read more

ஆவின் பால் தட்டுப்பாடு; வன்மையான கண்டனம்… கொதிக்கும் விஜயகாந்த்..!

ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தியுள்ளார். விஜயகாந்த் கொதிப்பு தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகவர்களுக்கு … Read more

கொலையா… தற்கொலையா…! சாத்தூரில் திகில் ஏற்படுத்திய மண்டை ஓடு: போலீசார் மீட்டு விசாரணை

சாத்தூர்: சாத்தூர் அருகே, சாலையோரம் மண்டை ஓட்டுடன் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எலும்புக்கூட்டை மீட்ட போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவரின் எலும்புக்கூடா அல்லது தற்கொலை செய்தவரின் எலும்புக்கூடா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர்-நெல்லை நான்கு வழிச்சாலையில் எட்டூர்வட்டம் அருகே, சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கிழக்கு பகுதியில் சாலையோரம் நேற்று மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடந்தன. அந்த வழியாக இருசக்கர … Read more

அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை: திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை: திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் Source link

பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பொன்னியின் செல்வன் படம் வரலாற்றை திருத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரலாற்றை திரித்து இயக்குனர் மணிரத்தினம் ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளதாக, மணிரத்தினத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவரின் அந்த மனுவில், கல்கியின் நாவலை தழுவிய இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவனின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், வரலாற்றை திரித்து மணிரத்தினம் படத்தை உருவாக்கியதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த … Read more