பழநி பங்குனி உத்திர திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றம்: ஏப். 4ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா நாளை மறுநாள் (மார்ச் 29) காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி … Read more

மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு..!!

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் தனது 99-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, மான் கீ பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன். இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக … Read more

கடும் விஷமுள்ள கண்ணாடி விரியனை பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்த நபர்.. பாம்பினை ஒப்படைக்க ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கினார்!

கரூரில் கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்த நபர் ஒருவர் அதனை யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் அலைந்து திரிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது வீட்டின் அருகே உலாவிக் கொண்டிருந்த கடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பினை பிடித்து அதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்தார். பின்னர் அதனை வெங்க மேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றபோது காவலர்கள் வாங்க மறுத்ததால், கரூர் … Read more

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அறிக்கை தயாரிப்பு ஒப்பந்தம் 4 நிறுவனங்கள் பங்கேற்பு – விரைவில் பணி ஆணை

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவது மற்றும் சரக்குகள் கையாளும் திறன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டும், பொருளாதார திறன் மேம்பாட்டைக் கருதியும், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம்: அங்கு, 4,700 ஏக்கர் பரப்பில், ரூ.20 ஆயிரம் … Read more

பறக்க தயாரானபோது மணலில் இன்ஜின் சிக்கியது பாரா மோட்டார் கவிழ்ந்ததில் உயிர் தப்பிய ஆந்திர அமைச்சர்

திருமலை: பறக்க தயாரானபோது மணலில் இன்ஜின் சிக்கி பாரா மோட்டார் கவிழ்ந்த விபத்தில், ஆந்திர அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநில நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் விசாகப்பட்டினம் வந்தார். ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தில் மாரத்தான் மற்றும் சாகச விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலையில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சுரேஷ் ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரில் பாரா மோட்டார் சவாரியை தொடங்கி வைத்தார்.  … Read more

எந்த சூழலிலும் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்யக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

எந்த சூழலிலும் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்யக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தல் Source link

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!!

சென்னை மாநகராட்சிக்கு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு செய்த நிலையில், இரண்டாவது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரிப்பன் மாளிகை மாமன்ற அரங்கில் காலை 10 மணிக்கு மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசிக்க உள்ளார். 2022-23 நிதி ஆண்டில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்ததால் அறிவுப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் எழுபதற்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என தகவல் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். 28, 29, … Read more