அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக – பாஜக இடையேயான உறவு சுமூகமாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக விமர்சித்து வந்தனர். மேலும், பாஜகவின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைந்ததால், பாஜகவின் நிர்வாகிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதன் காரணமாக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இந்த … Read more

கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!!

ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருப்பபது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் ஏப்ரல் 3, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி ரஷ்ய – உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி, 6 முறை பணக்கொள்கை குழு கூட்டத்தை … Read more

ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் என்பது சட்டப்படி நடந்துள்ளது – அமைச்சர் எல்.முருகன்

மதுரையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு சௌராஷ்டிரா – தமிழ்ச் சங்கமம் நடைபெறவுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மதுரை தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டியில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ் சேவை குறித்தும் பொள்ளாச்சியில் இளநீர் விற்று, அந்தப் பணத்தில் அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்யும் மூதாட்டி குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் … Read more

மதுரையில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் – அடுத்த மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை

மதுரை: அடுத்த மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை தொடங்கும் என்றும் இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள முக்கிய விமான நிலையங்களில் மதுரையும் ஒன்று. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் வர்த்தகர்கள், அரசியல் வாதிகள், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவசர தேவை கருதி இந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற ஓரிரு மாவட்டத்தினர் … Read more

காட்பாடி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வேலூர்: காட்பாடி அடுத்த லத்தேரி அருகே செம்மரக்கட்டைகளை கடத்தி சென்ற காரை போலீஸ் விரட்டி பிடித்தனர். கார் ஓட்டுநர் தப்பிய நிலையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லஞ்சம் கொடுத்த திமுக கவுன்சிலர்?! நடவடிக்கை எடுக்க முயன்ற மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்!

சிவகாசி மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் அழுத்தம் காரணமாக, சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முயற்சி செய்துவருவதாக பேசப்பட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கவுன்சிலர் இந்திராதேவியை தகுதி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் என்பவர் இந்திய தேர்தல் ஆணையம், உள்ளாட்சி முறை மன்ற … Read more

பரபரப்பு! முதலமைச்சரை டேக் செய்து பிக்பாஸ் பிரபலம் எச்சரிக்கை!!

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் என்பவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், அப்போது தனது நடவடிக்கைகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைத்துறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வாய்ப்பு எதுவும் சரியாக அமையவில்லை. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் … Read more

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை கருப்பு சட்டையணிந்து சட்டமன்றத்திற்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும். சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேச … Read more

நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்

நெல்லை: முன்பதிவில்லாத 4 பொது பெட்டிகளுடன் நெல்லை முதல் தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று (26ம் தேதி) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு நெல்லை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் (06040) இன்று (26ம் தேதி) மாலை 6 … Read more