குட் நியூஸ்! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 38 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுதோறும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இந்த புதிய திருத்தம் கொண்டுவரப்படும். இந்த மாற்றம் தற்போது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய … Read more

குறைந்த விலையில் பங்களா… ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட தில்லாலங்கடி பெண்கள் கைது..!

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மற்றும் நகைபறித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும்  சந்திரன் என்பவரை பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த  கலாராணி,சுமதி ஆகிய பெண்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரட்டுபாளையத்தில் குறைந்த விலையில் சொகுசு பங்களா விற்பனைக்கு இருப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை நம்பி வந்த சந்திரனை பங்களாவுக்குள் அடைத்து வைத்து அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஐந்தரை … Read more

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் (84) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி … Read more

அரிசியில் சிக்கி மூச்சுத்திணறி 2 பேர் பலி

காரைக்குடி: அரிசியில் சிக்கி மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயலை சேர்ந்தவர் குருசேகர். இவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை சாக்கோட்டை மித்ராவயல் சாலையில் உள்ளது. இங்குள்ள அரிசி சேமிக்கும் கலத்தில் இருந்து அரிசியை சாக்குப்பையில் பிடிக்கும் பணியில் கண்டனூர் திலகர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் முத்துக்குமார் (45), பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார் (30) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீர் என அரிசி சேமிக்கும் கலனில் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்வு..!!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். ஏற்கனவே ஜனவரி 2023யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் … Read more

10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஆண்டு … Read more

தென்மண்டலத்தில் கடந்த 79 நாட்களில் 750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம்: ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

மதுரை: மதுரை உட்பட தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் முதற்கட்டமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கும்பலை கண்டறிந்து கைது செய்து, சிறைகளில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, அவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் சொத்துக்கள் மற்றும் அவரை சார்ந்த உறவினர்களின் சொத்துக்களை முடக்கம் செய்தனர். இதனால் தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை முற்றிலும் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் … Read more

சென்னை கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: முக்கிய நிர்வாகி தமிழக டி.ஜி.பி-யுடன் சந்திப்பு

சென்னை கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: முக்கிய நிர்வாகி தமிழக டி.ஜி.பி-யுடன் சந்திப்பு Source link

#BREAKING | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான … Read more