கோவை : ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்.! நடந்தது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டாடாபாத் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நித்யா என்ற திருநங்கை வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரிடம் பெண் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் பணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால், பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீசாரின் ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியும், பெண் காவலரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவலர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் திருநங்கைகள் மீது … Read more

நடிகர் அஜித்திற்கு விஜய் நேரில் ஆறுதல்!!

நடிகர் அஜித்தின் தந்தை மறைந்ததை அடுத்து, நடிகர் விஜய், அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) இன்று அதிகாலை காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நடிகர் பார்த்திபன், மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, … Read more

“ராகுல் காந்தி மீதான பாஜக தலைமையின் பயத்தையே தகுதி நீக்க நடவடிக்கை காட்டுகிறது” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. இதன் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் … Read more

ஒன்று திரளுங்கள்.. ராகுல் காந்திக்கு ஆதரவு.. சீமான் அறைகூவல்.. தமிழக அரசியலில் பரபர..!

கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடகாவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ” பெயரில் மோடி என வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்களே என்று பேசினார். அதாவது, நிரவ் மோடி, லலித் மோடி, ஆகிய மோடி என்று பெயர் வைத்துள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி மறைமுகமாக நரேந்திர மோடியை சாடி பேசியிருந்தார். அதற்கு சூரத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் … Read more

'ராகுல் காந்தி தான் பாஜகவின் பிராண்ட் அம்பாசிடர்': அண்ணாமலை பேட்டி

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு,  ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சிவகங்கை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்-சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை சுமார் 1400 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாகவும் தகவல். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டு … Read more

எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்.!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more

விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி..!!

ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி கோவையில் மார்ச் 25-ம் தேதி நடைபெறுகிறது. தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து … Read more

ராகுல் தகுதி நீக்கம் | “காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் அவசர நிலை…” – தமிழக பாஜக

சென்னை: “காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும்.பாஜக ஆட்சியில் இருப்பதால் நாடும், நாட்டு மக்களும் நெருக்கடி நிலை பயங்கரத்தில் அவதியுறவில்லை” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தியை தண்டித்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. ராகுல் காந்தியை … Read more