நீதி வெல்லும்.. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்.!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு … Read more

அலர்ட்! இந்த 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு!!

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 2 ஆவது வாரத்தில், சராசரியாக நாள்தோறும் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது நாள்தோறும் சராசரியாக 966 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் … Read more

மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு இனி வாட்ஸ் அப் மூலமும் புகார் அளிக்கலாம்

சென்னை: பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து மருந்து கட்டுப்பாடு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்துவருகின்றனர். இனி புகார்களை வாட்ஸ் அப் (Whatsapp) செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் அப் (Whatsapp) செயலி … Read more

காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊட்டி: தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பண்ணை தொழிலாளர்கள் தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி: டெமோ செயலி வெளியிட்டது தெற்கு ரயில்வே

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைபடுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டத்தில் டெமோ செயலி வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169வது கூட்டம் இன்று (23.03.2023) தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. அதில் முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் முக்யா ராஜ்பாஷா மற்றும் ஸ்ரீ கவுதம் தத்தா ஆகியோர் ‘இந்தியை … Read more

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: புதுச்சேரியை சாய்த்த தமிழ்நாடு… இறுதிப்போட்டி முன்னேறி அசத்தல்!

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: புதுச்சேரியை சாய்த்த தமிழ்நாடு… இறுதிப்போட்டி முன்னேறி அசத்தல்! Source link

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை.. இன்று ஒரே நாளில் 3 பேர் பலி.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

வரதட்சணை பெற்ற பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா? – பரபரப்பு தீர்ப்பு!!

பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தபின்னர் குடும்ப சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கோவாவை சேர்ந்த தம்பதிக்கு நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள். அனைவர்க்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில், தந்தை இறந்த பின்னர் குடும்பத்திற்குச் சொந்தமான கடை சகோதரிகளுக்கு தெரியாமல் சகோதரர் பெயருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சகோதரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு சகோதரிகளுக்கும் திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்டது என சகோதரர் தரப்பு … Read more

மின்வேலியில் சிக்கி பலியாகும் யானைகள்: அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏப்ரல் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது … Read more

ராகுல் காந்திக்கு பாஜக போட்ட பிளான்; சீக்ரெட்டை உடைத்த திருமாவளவன்.!

2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்கவே, குஜராத் நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கியுள்ளதாகவும், இது பாஜகவின் சதி செயல் எனவும் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது, பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த முறை அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை போன்று, இம்முறை வெற்றி பெற முடியாது என்பதையே கருத்து கணிப்புகள் கூறிவருகின்றன. ஆனால் மத்தியில் மூன்றாவது முறையாக … Read more