தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? இறையன்புவை டீலில் விட்ட ஆளுநர்!

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார், இறையன்புவுக்கு வேறு ஏதும் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து கடந்த ஓரிரு மாதங்களாக கோட்டை வட்டாரங்களில் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. தலைமைச் செயலாளருக்கான ரேஸில் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா, பிரதீப் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இவர்களில் திறமையும் ஆற்றலும் அரசோடு … Read more

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோடைகாலம் துவங்கிய சூழலில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, பலவித குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால் … Read more

'நிலக்கரி எடுத்தால் வீராணம் ஏரி பாலைவனமாகிவிடும்' – வேல்முருகன்

வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் … Read more

இன்று அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான வழக்கில் தீர்ப்பு..!!

கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில், எந்த இறுதி தீர்ப்பும் வெளியாகாத நிலையில், பொதுச்செயலர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடத்தப்படும் என, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அப்பதவிக்கு எடப்பாடி பழனிசாமி … Read more

தமிழகத்தில் 5 நகரங்களில் வெயில் சதம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 28-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி வேலூர், நாமக்கல், மதுரை, திருச்சி ஆகிய … Read more

இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ்: திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளுர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் சையத் அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகிய 2 பேரை டெல்லி திகார் … Read more

பற்களை உடைத்து காவல் நிலைய சித்ரவதை: ஐ.பி.எஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பற்களை உடைத்து காவல் நிலைய சித்ரவதை: ஐ.பி.எஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Source link

இனி சென்னை சாலையோரங்களில் வாகனம் நிறுத்தினால் கட்டணம்..!!

சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியில் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்து, அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் பார்த்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், காலப்பேக்கில் இந்தத் திட்டத்தை முழுமையாக … Read more