#BIG NEWS : பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்..?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு … Read more

அலுவலகத்திற்குள் நுழைந்து தாசில்தாருக்கு கொலை மிரட்டல்.. முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் மீது வழக்கு..!

மதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேசநேரி கிராமத்தில் 50 சென்ட் அரசு நிலத்தை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரத்தினசாமி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆக்கிரமிப்பை மீட்கும் முயற்சியில் கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, ரத்தினசாமி தனது ஆதரவாளர்களுடன் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியானது. இதுகுறித்து, நேசநேரி விஏஓ … Read more

ஜூன் 3-ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு: திமுக தீர்மானம்

சென்னை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமாகிய கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீமானத்தின் விவரம்: தலைவர் கருணாநிதிக்கு வரும் ஜுன் 3-ம் தேதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று … Read more

நயினார் நாகேந்திரன்: அதிமுக – பாஜக உரசல்… அந்த அறிவிப்பு வந்ததும் ஃபினிஷ்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் நீதிமன்றம் வரை சென்று அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாஜக உடனான கூட்டணியில் மோதல் போக்கு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மற்றும் அதிமுக மூத்த தலைவர்களுக்கு இடையில் வார்த்தை போர் தொடர் கதையாகி வந்தது. ஒருகட்டத்தில் அதிமுக உடனான கூட்டணி விஷயத்தை கையிலெடுத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி இது தமிழக பாஜகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் … Read more

இதை செய்தால் போதும்.. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் -ஒ.பன்னீர்செல்வம் உறுதி

AIADMK News: அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், 1977ல் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம்,  வகித்த பதவிகளை பட்டியலிட்டார்.  கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக பன்னீர்செல்வம் முக்கிய பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி … Read more

காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நரேந்திரன். இவர், காஞ்சிபுரம் அருகே குருவிமலை வலத்தோட்டம் வசந்தம் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி … Read more

புதுச்சேரி – பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற போட்டி: உற்சாகமாக கலந்துகொண்ட பிராஸ் நட்டினர்  

புதுச்சேரி – பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற போட்டி: உற்சாகமாக கலந்துகொண்ட பிராஸ் நட்டினர்   Source link

13-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை.! காரணம்? போலீசார் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்தில் வசித்து வந்தவர் சம்பத் (36). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து சம்பத் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ … Read more

நிலநடுக்கம் : அலறி ஓடிய நடிகை குஷ்பூ..!!

ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90-களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக … Read more

சென்னை மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு பாடகர் டிஎம்எஸ் பெயர்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார். தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் … Read more