திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை
திருவள்ளூர்: வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் நகைக்கடை நடத்திவரும் ராமேஸ்லால் என்பவரின் கடை ஊழியர் சோகன்லால் கொண்டு சென்ற நகைகள் பூச்சி அத்திப்பட்டு பகுதியில் உள்ள அடகு கடைக்கு கொண்டு சென்றபோது 175 சவரன் நகைகள், ரூ.1.10லட்சம் பணம் ஆகியவை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.