லஞ்சம் கொடுத்த திமுக கவுன்சிலர்?! நடவடிக்கை எடுக்க முயன்ற மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்!

சிவகாசி மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் அழுத்தம் காரணமாக, சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முயற்சி செய்துவருவதாக பேசப்பட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கவுன்சிலர் இந்திராதேவியை தகுதி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் என்பவர் இந்திய தேர்தல் ஆணையம், உள்ளாட்சி முறை மன்ற … Read more

பரபரப்பு! முதலமைச்சரை டேக் செய்து பிக்பாஸ் பிரபலம் எச்சரிக்கை!!

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் என்பவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், அப்போது தனது நடவடிக்கைகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைத்துறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வாய்ப்பு எதுவும் சரியாக அமையவில்லை. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் … Read more

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை கருப்பு சட்டையணிந்து சட்டமன்றத்திற்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சட்டமன்றத்திற்கு நாளை (மார்ச்27) வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும். சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பேச … Read more

நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்

நெல்லை: முன்பதிவில்லாத 4 பொது பெட்டிகளுடன் நெல்லை முதல் தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று (26ம் தேதி) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு நெல்லை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் (06040) இன்று (26ம் தேதி) மாலை 6 … Read more

காரில் துப்பாக்கி… ஜி.பி. முத்துவை ‘கடத்திய’ வில்லன் நடிகர் காளையன்: ஜாலி வீடியோ

காரில் துப்பாக்கி… ஜி.பி. முத்துவை ‘கடத்திய’ வில்லன் நடிகர் காளையன்: ஜாலி வீடியோ Source link

#BREAKING | குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வை ஒரே நடுவத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்று இருக்கும் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட  டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில்  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 … Read more

4 வயது மூத்த நடிகையுடன் திருமணம்… பிரபல நடிகர் பதிலடி!!

பசங்க கிஷோர் தன்னைவிட 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்தது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர், தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில், கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை ப்ரீத்தி … Read more

ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் சீர்கொண்டு வந்து சிறப்பித்தனர். ஆலங்குடி தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 6 மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்களும், பெரிய பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்களும் தட்டு சீர்வரிசையுடன் கோயிலுக்கு வருகை … Read more

தமிழகத்தில் பூஜ்யம் நிலை நோக்கி இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி அதாவது பூஜ்யம் என்கிற நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஞாயிறன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு … Read more

ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம். தமிழரின் தொன்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அருங்காட்சியத்தை பார்வையிட வருகை தரும் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி உள்நாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு- ரூ.10, மாணவர்களுக்கு … Read more