நடையை கட்டும் அண்ணாமலை..? மேலிடம் எச்சரித்தும் கேட்கல.. பாஜகவில் பரபர..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவம் நடைபெற்றது. குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ”அதிமுகவுடன் … Read more

Video: மின்சாரம் தாக்கி யானை பலி… உயிரிழந்த நேரடி காட்சிகள் வைரல்

Elephant Death Viral Video: கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அந்த யானைகள் கடந்த மாதம் தனித் தனிக்குழுக்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து  உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன.  இதனால், விளைநிலங்களில் பயிர்களை சேதத்திற்கு உள்ளாகுகின்றன. விவசாயிகள் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துகொள்ள வயல்வெளிகளை சுற்றிலும் அனுமதியின்றி … Read more

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அறிவிப்பு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய  ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் … Read more

அடேங்கப்பா! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! 38 பேர் மனுதாக்கல்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை மாலை 3 மணியுடன் மனுத்தாக்கள் நிறைவடைய உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வரும் 26 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட இன்று காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருக்கு முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் … Read more

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த  மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் … Read more