தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: டெல்லியிலிருந்து வந்த வார்னிங்!

கொரோனா பரவல் காரணமாக உலகமே இரு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போனது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னரே பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா மூன்று அலைகள் உருவாகி அடங்கியது. கடந்த ஒர் ஆண்டு காலமாக பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலை தூக்கி வரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறைச் … Read more

பெரியார் பல்கலை பதிவாளரை கைது செய்ய சென்ற அமீனா: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி வேலை

சேலம்: சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி (53). இவர் 1998ல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக சேர்ந்தார். ஆனால் அவர் 2002ல் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரை பணியில் சேர்க்க கடந்த 2013ல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும் நீதிமன்றத்தை தெய்வராணி … Read more

குட் நியூஸ்..!! அடுத்த 3 மாதங்களுக்கு உங்க ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) தெரிவித்துள்ளது. குறிப்பாக, … Read more

காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் கைது..!

கோவை அருகே காதல் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்ட 10  மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இசை பூங்குன்றன் கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அபிஷேக் என்ற மற்றொரு மாணவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஏற்பட்ட தகராறில் அபிசேக் நண்பர்கள் 6 பேர் இசைபூங்குன்றனை காரில்  கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அறிந்த பூங்குன்றன் ஆதரவாளர்கள் அபிசேக்கை கடத்தி … Read more

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மையங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழகத்தில் புதிதாக 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார். இந்திய பொறியியல் ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி)நடத்தும் 10-வது இந்திய சர்வதேசபொறியியல் கொள்முதல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் சார்பில் 340 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. நாளை (மார்ச் 18) வரை … Read more

பெண்களை பேசி மயக்கி 'பாவம்' செய்த பாதிரியார்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த இவருக்கும் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே  பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் … Read more

திருவண்ணாமலை அருகே காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த லாரி திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

"கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" – ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி

வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு.. வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு … Read more

தேனி இளைஞர்களே தயாரா… இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!

தேனி மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.  கல்வி தகுதி: •10-ம் … Read more