தமிழகத்தில் 400-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு – ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று ஒரேநாளில் 401 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளான சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று … Read more

அன்புள்ள டானியாவுக்கு… பள்ளிக்கு செல்ல போகிறாயாமே..! – முதல்வர் வாழ்த்து

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்லத் தொடங்கியதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. நாளடைவில் முகம் மாறுபட்டு பாதிப்பு அதிகமானது. 6 ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு … Read more

பிரதமர் மோடியை வரவேற்ற திமுக! திருமாவளவன் சொன்ன முக்கிய தகவல்!

பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

“இந்த நேரத்தில் வெளியே வராதீங்க…” – அமைச்சர் எச்சரிக்கை!!

வெயில் அதிகரித்து வருவதால் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். வெயில் காலங்களில், தேநீர், … Read more

தனுஷின் தந்தை என உரிமை கோரிவந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை: தனுஷின் தந்தை என உரிமை கோரியவர், திடீரென்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரை மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன்(70) என்பவர், தனுஷின் தந்தை என உரிமைக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது வரை நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நடிகர் தனுஷ் நேரடியாக ஆஜரானார். அதனால், இந்த வழக்கு விசாரணை தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கதிரேசன் தற்போது … Read more

இனி தொல்லை இல்லை… அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்.. முழு லிஸ்ட்..!

பயணங்களுக்கிடையே தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்றுள்ள நெடுஞ்சாலை உணவக முழு பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள உணவகங்கள் அனைத்திலும் கழிவறைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் சிசிடிவி இருக்க வேண்டும், எம்ஆர்பி-விலைக்கு மேல் விற்கக்கூடாது என்ற விதிகளும் அடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள்: நெல்லை ஆரியாஸ் மதுரை – தூத்துக்குடி மேலக்கரந்தை, தூத்துக்குடி. ஹோட்டல் அரிஸ்டோ திருச்சி – சென்னை விக்கரவாண்டி, … Read more

ஏன் டிக்கெட் கிடைப்பதில்லை? சென்னை அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன் விளக்கம்!

CSK vs RR: வரும் புதன்கிழமை சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் போட்டி நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் பிளாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.  

சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியர்!!

கள்ளக்குறிச்சி ஆட்சியர், தனது காலணியை உதவியாளரை எடுக்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு செய்தனர். அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ஆட்சியர் ஷ்ரவண் குமார், தனது காலணியை கோயிலுக்கு வெளியே கழற்றினார். அப்போது, அங்கிருந்த … Read more