Tamil News Live: புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை; வைரஸ் காய்ச்சல் அச்சம்!
Tamil News Live: புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை; வைரஸ் காய்ச்சல் அச்சம்!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil News Live: புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை; வைரஸ் காய்ச்சல் அச்சம்!
சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
“அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்” என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் தள்ளுபடி அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சுயஉதவிக் குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான … Read more
கேரள ஸ்டைல் கோதுமை அடை: மிஸ் பண்ணாம சமைத்து பாருங்க Source link
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த தக்கோலம் கீழ் கடைத்தெருவில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சிமெண்ட் மற்றும் கட்டுமானத்திற்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பாக கடந்த மார்ச் 11-ம் தேதி கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முத்துராமலிங்கம் இது குறித்து தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த இளைஞர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று அவரை நேரில் மிரட்டியுள்ளார். இதனையடுத்து முத்துராமலிங்கம் … Read more
இந்தியாவில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று புதுவை சட்டப்பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு … Read more
மதுரை அருகே ஐடி ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி ஐபோன், லேப்டாப்பை வழிப்பறி செய்ததுடன் ஜி பே மூலம் பத்தாயிரம் ரூபாய் பணம் பறித்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதகையைச் சேர்ந்த முகமது தானிஷ் என்பவர் நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கீழக்குயில் குடி சமணர் படுகை மற்றும் மலை மேல் உள்ள சிற்பங்களை காண சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 … Read more
புதுடெல்லி / சென்னை: நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், … Read more
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (மார்ச் 15) மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக நிதித்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வர உள்ளன, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு ஒதுக்கப்பட உள்ளது, சிறப்பு … Read more