தேசிய கட்சியான பாஜகவில் மத்தியில்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் : அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விளக்கம்

சேலம்: தேசிய கட்சியான பாஜகவில் மத்தியில் உள்ளவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள், மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, சொந்த மாவட்டமான சேலத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில், சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் – ஜெயலலிதா சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: … Read more

கர்நாடகாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட பசுக் காவலர், பாஜக தலைவர்களுடன் நெருக்கம்?

கர்நாடகாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட பசுக் காவலர், பாஜக தலைவர்களுடன் நெருக்கம்? Source link

சிவகாசியில் பயங்கரம்.! நடுரோட்டில் தொழிலாளி வெட்டிக்கொலை.! மர்ம கும்பலின் வெறிச்செயல்..!

சிவகாசியில் நடுரோட்டில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சுந்தரபாண்டி (36). இவர் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சுந்தரபாண்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. என் நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய சுந்தரபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். … Read more

சர்ச்சையில் சிக்கய பெண் அமைச்சர்! ‘பிளேபாய்’ இதழின் அட்டை படத்தில் கவர்ச்சி போஸ்… !!

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று பிளேபாய். பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் அமைச்சர் மார்லின் ஷியாப்பா (40), ‘பிளேபாய்’ இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுப்பவர்கள் ஆடையில்லாமல் தான் … Read more

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!

கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் தமிழகத்தில் ஒமிக்ரான் உருமாற்றமான XBB, BA2 வகை தொற்று பரவல் அதிகரிப்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் திரையரங்கம், பூங்காக்கள், உணவு விடுதிகள், கூட்ட அரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் Source link

காவிரி டெல்டாவில் 5 புதிய நிலக்கரி திட்டங்களுக்கு எதிர்ப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தித் தராது என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி … Read more

தென்காசி : மக்கள் நலத்திட்டங்களை செய்ய வந்தால் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.! ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு.!!

மக்கள் நலத்திட்டங்களை செய்ய வந்தால் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.! ஆட்சியர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு.!! தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பாகுளம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக இருக்கும் சந்திரன் என்பவரும், அவருடன் சேர்ந்து அதே ஊராட்சியில் கவுன்சிலராக உள்ள மற்ற எட்டு உறுப்பினர்களும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், “தங்களது ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் சிவசங்கரி என்பவர், தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு மக்கள் … Read more

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு காரைக்காலில் நிகழ்ந்த சோகம்!!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை … Read more

7-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க வாய்ப்பு

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தேர்தல் அவரது ஆளுமை மற்றும் தலைமைப் பண்பை மதிப்பிடும் காரணியாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள … Read more