#சென்னை விமான நிலையம்: ரூ.95.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் ரூ.95.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் … Read more

பாமக நிகழ்ச்சியில் பரபரப்பு! திடீரென சரிந்த மேடை… காயமின்றி தப்பினார் அன்புமணி ராமதாஸ்.!!

1989-ல் டாக்டர் ராமதாசால் தொடங்கப்பட்ட பட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அதன்பிறகு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியினரிடையே பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி பிற்பகல் 3 மணி … Read more

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வரும் நிலையில், சென்னை முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் வர உள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு ஏப்.8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார். … Read more

நாளொன்றுக்கு 350 ரூபாய் உதவித்தொகை – சட்டப்பேரவையில் வெளியான அதிரடி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு : * மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை ₹15,000-ல் இருந்து ₹25,000-ஆக உயர்த்தப்படும். * மேலும் கடலில் மீன்ப்டிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹250-லிருந்து ₹350-ஆக உயர்த்தி வழங்கப்படும். * கால்நடை பராமரிப்பு மானியக் கோரிக்கை. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டு, … Read more

இன்று பூமியை நோக்கி சீறிவரும் சிறியகோள்..! பூமிக்கு ஆபத்தா?

இன்று அதி பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி சிறியகோல் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா ‘அதிரடி’ விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடுவது அல்லது உடைந்து சிதறிவிடும். மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை அசுர ‘முத்தம்’ இட்டதும் நடந்திருக்கிறது. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது. அவ்வாறு … Read more

விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 400 ஓட்டுநர்களை நியமிக்கலாம்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 400 ஓட்டுநர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓராண்டு காலத்துக்கு 400 ஓட்டுநர்களை நியமனம்செய்வது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரி கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரியில் நிறுவனங்கள் முன்னிலையில் டெண்டர்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இதில் நாள் ஒன்றுக்கு ஒரு ஓட்டுநருக்கு தலா ரூ.553 என்றளவில் ஊதியம் வழங்க முன்வந்த சென்னையைச் சேர்ந்த டீம் … Read more

ஆசீட் வீசச் சொல்லி நாடகமாடிய பெண்.! பின் நடந்தேறிய விவகாரங்கள்.!

கடனிலிருந்து தப்பிப்பதற்காக  கள்ளக்காதலன் மூலம் ஆசிட் வீசி நாடகமாடிய பெண்ணையும் அவரது கள்ளக்காதலர் மற்றும் உடந்தையாகயிருந்த நபர்களையும் குணசேகரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள மாடத்தூர் கோனம் பகுதியைச் சார்ந்தவர் லதா வயது 45. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் லதா சித்திரன்கோடு பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு நடந்து … Read more

அருணாச்சல்லில் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அட்டூழியம் செய்த சீனா..!!

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது. இந்த பெயர் மாற்ற … Read more

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் 2,037 கி.மீ. பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிப்பு

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2022-23-ம் நிதியாண்டு) 2,037 கி.மீ. பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைத்தல், வளைவுகளை குறைத்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரித்து, இயக்க அனுமதிக்கப் படுகிறது. ரயில்களின் வேகம் பொருத்தவரை குரூப் ஏ வழித்தடம், குரூப் பி … Read more

நடிகை கஸ்தூரி அதிமுகவின் இணைந்தாரா? உண்மை என்ன? அதிகாரபூர்வ செய்தி வெளியானது!

நடிகர் நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை கஸ்தூரி பூங்கொத்து வழங்குவது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள அந்த நபர், “நடிகை கஸ்தூரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நம்பிய அதிமுகவினர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் நடிகை … Read more