'எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு ஓடி விடு': மதுரையில் ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு போஸ்டர்..!!

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ள நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டும் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அணி கையில் எடுத்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால … Read more

50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? – பின்னணியில் பகீர் தகவல்கள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம். தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் … Read more

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம் Source link

சேலம் அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி விவசாயி பலி.!

சேலம் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் கருமந்துறை பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி குழந்தையன் (40), அப்பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் வெள்ளரிக்காய் பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே குழந்தையன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more

இறுதி தேர்வை முன்கூட்டி நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

தமிழகத்தில் தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 13-ம் பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன … Read more

கன்னியாகுமரி பாதிரியார் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்..!

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ என்பவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் அவர் மீது பேச்சிப்பாறையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் … Read more

மாமல்லபுரம் – குமரி கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம்: மத்திய அமைச்சர் பதில்

சென்னை: மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருவான்மியூர் முதல்கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல்மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் 697 கிமீ பகுதி தேசிய நெடுஞ்சாலை அணையத்தின் கீழ் வருகிறது. … Read more

”ஆயுதங்களுடன் போட்டோ வீடியோ வெளியிட்டால்..” – கோவை மாநகர காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்… ”கோவை மாநகரில் வலைதள உபயோகிப்பாளர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு தோரணையாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். சிலர் ஆயுதங்களை … Read more