கீழ்தேனூரில் பழுதடைந்த மின் மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே கீழ்தேனூரில் பழுதடைந்த மின் மாற்றியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் மதுரா கீழ்தேனூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு தியாகதுருகம் மின் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்தேனூர்-தியாகதுருகம் செல்லும் சாலை அருகே 100 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்தே விவசாய மின் மோட்டார் … Read more

குடிபோதையில் தொந்தரவு செய்றாங்க ; மதுக்கடையை மூட சொல்லி 30் அரசு பள்ளி மாணவிகள் போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி 30-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளிக்கூடம், சுப்ரமணியசாமி கோவில், அரசு மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையம் அருகே அதிகளவு மக்கள், பெண்கள், … Read more

அ.தி.மு.க கூட்டணியை கைவிட அண்ணாமலை அழைப்பு; பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் மாற்றுக் கருத்து

அ.தி.மு.க கூட்டணியை கைவிட அண்ணாமலை அழைப்பு; பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் மாற்றுக் கருத்து Source link

ஒரே நாளில் ஸ்டாலின் உத்தரவை தூக்கி எறிந்த உடன்பிறப்புகள்! ட்ராமா போடாம கைது பண்ணுங்க – அடித்து ஆடும் அறப்போர் இயக்கம்!

திமுகவினர் சாலைகளில் ஓரங்களில் பேனர்கள் வைக்க கூடாது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இரு தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கி தமிழக அரசியல் கட்சிகளை வெளுத்து வாங்கிவரும் அறப்போர் இயக்கம், அன்றைய தினமே, “கட்சி நடவடிக்கை எடுப்பது உங்க விருப்பம். ஆனால் சாலைகளில் சட்ட விரோத பேனர்கள் கொடிகள் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி … Read more

அவர் விருப்பத்திற்கு எங்களை நீக்கினார்… ஓபிஎஸ் தரப்பு வாதம்…

எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி, சுயநலவாதியாக அதிமுக பொதுக்குழு கூட்டங்களை கூட்டி அவருக்கு சாதகமாக பதவியை பறித்துக்கொண்டார் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டி பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி இடைக்காலப் பொதுச் செயலாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டார், இதனை … Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்.. வழக்குப்பதிவு செய்து அவரது சொந்த ஜாமீனில் விடுவித்த போலீஸ்..!

சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த இளைஞரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரது சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அயோத்தியாபட்டணம் சோதனைசாவடியில், அம்மாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மனோகரனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்த மனோகரனிடம், அபராதத்தை செலுத்திவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும்படி கூறியதால் அவர் போலீசாரிடம் … Read more

தி.மலை பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான 23,800 சதுர அடி இடத்தை மீட்டு அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடம் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுர அடி இடத்தை இந்து சமய அறநிலையத் துறை சனிக்கிழமை மீட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான 23,800 சதுரடி இடம், கோயிலின் வடக்கு திசையில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் முன்பு உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து வரும் இந்த இடத்தை, நிர்வகிப்பதில் பிரச்சினை எழுந்தபோது, திருவண்ணாமலை மாவட்ட … Read more

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

சேலம்: கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதை தடுக்க தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ் நகர் ஆட்சியர் ராஜா, எஸ்.பி, பத்மினி சாகு, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்.!

பொதுத்தேர்வு எழுத 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிந்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்ட அவர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்களை நன்றாக இருக்கிறதா என சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில் பிள்ளையாருக்கு நடைபெற்ற … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20-ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் … Read more