தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை … Read more

சூப்பர்! ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பணி நேரம் மாற்றம்!!

ரம்ஜான் நேரத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்பதால், இஸ்லாமியர்களுக்கு பணி நேரத்தில் மாற்றம் செய்து பீகார் அரசு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வரலாம். அதே போல் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளத. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக … Read more

நகை முகவரை காரில் கடத்தி தங்கம், பணம் கொள்ளை வழக்கில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6பேர் கைது..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில்  நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம்  2  கோடி ரூபாய் ரொக்கம்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் இருந்து நகை பணத்துடன் சென்றபோது காரில் வந்த 4 பேர், போலீஸார் எனக் கூறி  நகைகளை பறித்து விட்டு  லேனா விலக்கு சுங்கச்சாவடி … Read more

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்; 160 பேருக்கு ரூ.2.25 கோடி ஊக்கத் தொகை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற160 தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 76 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி … Read more

அடேங்கப்பா, ரூ.25 ஆயிரம் கோடியில் கை வைத்த ஒன்றிய அரசு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 வரும் திங்கள் கிழமை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளரை சந்தித்தார். தமிழக நிதி நிலைமை சரிவிலிருந்து மீள்கிறதா? அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை: கல்லூரி முதல்வர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு வரும் 21-ம் தேதி விடுமுறை என கல்லூரி முதல்வர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வணிக நிர்வாகவியல்துறை கவுரவ விரிவுரையாளர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களே… இது உங்களுக்காக… மிஸ் பண்ணிடாதீங்க..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  நடைபெறும் இடம்: பட்டாபிராம், தருமமூா்த்தி இராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. இதில், … Read more

வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது: இன்று மனுத்தாக்கல்..!!

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க. சட்டதிட்ட விதி எண். 20(அ)பிரிவி -2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளர் வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 18-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை … Read more

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டை அகற்றம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டையை அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (27). டிப்பர் லாரி ஓட்டுநர். கடந்த 5-ம் தேதி காலை 2.20 மணி அளவில் சாலையில் ஆட்டோகவிழ்ந்ததில், அவரது வலதுமார்பு பகுதியில் ஒரு மரக்கட்டைகுத்தியது. முதுகுப் பகுதி வரை ஊடுருவியிருந்த கட்டையுடன் அவர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக அதிகாலை 5.50 மணிக்குராஜீவ்காந்தி அரசு பொது … Read more