பனி பாதி… மேகம் மீதி…. கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டத்துடன், மேகமூட்டமும் அதிகளவு இருந்ததால் பகலே தெரியாத அளவிற்கு பட்டப்பகலில் இருள் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரத்திலேயே பனிமூட்டம் மலைப்பகுதியில் மட்டுமின்றி நகர் பகுதிக்குள்ளும் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்கிறது. நேற்று புயல் சின்னம் காரணமாக கொடைக்கானல் நகர், புறநகர் முழுவதும் பனிமூட்டத்துடன், மேகமூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் … Read more