நல நிதியை செலுத்த நாளை வரை அவகாசம்: தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு

சென்னை: 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை நாளைக்குள் (ஜன. 31) செலுத்தும்படி தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியச் சட்டப்படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்காக ரூ.20 மற்றும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40 சேர்த்து, மொத்தம் … Read more

முட்டை விலை மேலும் 30 காசு குறைந்தது

நாமக்கல்:  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாளில் முட்டை விலை 95 காசுகள் வரை குறைந்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில், மேலும் 30 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்தார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 490 காசில் இருந்து 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தைப்பூச திருவிழாவையொட்டி, முட்டை விற்பனை குறைந்து … Read more

'திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை' – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் 22 மாத திமுக ஆட்சியில் பலன்பெறாத மக்களே இல்லை என்றும் கூறினார் அவர். இதுகுறித்து பேசுகையில், “நல்லாட்சிக்கு நல்லாதரவு … Read more

மூடப்பட்ட மேட்டூர் அணை; 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கும் அபாயம்.. பி.ஆர் பாண்டியன்

மூடப்பட்ட மேட்டூர் அணை; 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கும் அபாயம்.. பி.ஆர் பாண்டியன் Source link

பணத்தை வைத்து எதையும் வாங்கும் கட்சி திமுக… ஆதாரமாக வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க, மக்களின் பேராதரவு தங்கள் ஆட்சிக்குத்தான் அப்படியே நீடிக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காகத் திமுக தன் வசமிருக்கும் ஆட்சி அதிகாரத்தையும், குவிந்து கிடக்கும் எல்லையற்ற பணத்தையும் பயன்படுத்தி எல்லா வகையிலும் வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு முயலும் என பாஜக குற்றஞ்சாட்டிவருகிறது. இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக … Read more

காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம்: டிஎஸ்பி, வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்து உயரதிகாரிகள் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஸ்ரீராம் நகரில் புதிதாக வீடு கட்டி  குடியேறினார்.  வீட்டின் சுற்றுச்சுவர் முன் பகுதியில் இருந்த பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய்த் துறையினர் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் துணையோடு சென்று அகற்றினர். இதற்கு திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பிப் 1, 2-ல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பிப். 1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

காரைக்குடி அருகே தனியார் இடத்தில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய தாசில்தார், டிஎஸ்பி இடமாற்றம்

காரைக்குடி: காரைக்குடியில் தனியார் இடத்தில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய தாசில்தார், டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரியார் உணர்வாளரான இவர், கோட்டையூரில் உள்ள தனது வீட்டின் சுற்றுச்சுவரில் பெரியார் மார்பளவு சிலையை நிறுவினார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக காரைக்குடி தாசில்தார் கண்ணன், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் திறப்பு விழாவிற்கு தடை விதித்தனர். இதற்கு, … Read more

போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக பூங்கா; மதுரையில் புதிய முயற்சி

போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக பூங்கா; மதுரையில் புதிய முயற்சி Source link

ராமநாதபுரம் அருகே சோகம்.! 10ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவேணி. இவர்களுடைய மகன் சரண்குமார் (15) காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கலைவேணி நேற்று சரண்குமாரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரண்குமார், தற்கொலை செய்து கொள்வதற்காக அரைக்குள் சென்று தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று சரண்குமார் நீண்ட நேரம் … Read more