ரூ.3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்

குன்னூர்: நீலகிரி மலை ரயிலை ரூ.3.60 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல் சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை … Read more

சேலம்: வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி

சேலம் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 63 சவரன் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்கு உட்பட்ட சாமிநாயக்கன்பட்டி லிங்க பைரவி நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. கணவரை பிரிந்து வாழும் விஜயலட்சுமி தனியார் மருந்து நிறுவனத்தில் மனிதவளத் துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 25 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் … Read more

இனி ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை..!!

சாதாரண வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பலர் நாய்களை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு அது ஆனந்தமாக இருந்தாலும் பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் தொல்லையாக கருதுகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி இருப்பது தான் பிரச்சினையாகி உள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு அவர்கள் புகார்களும் அனுப்பினர். இதனையடுத்து ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக நாய்களை வளர்க்க வேண்டும் … Read more

வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணியாற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஜேசிடி பிரபாகர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளுக்காக, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர்கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் அமைத்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவு … Read more

ஈரோடு கிழக்கு: திமுக கூட்டணி இடைத்தேர்தல் முடிவுகள்- ஈஸ்வரன் கொடுத்த மெகா அப்டேட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினசரி பிரச்சாரம், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பு, தீவிர ஆலோசனை என அனல் பறக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவிற்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர். களமிறங்கும் கூட்டணி கட்சி எப்படியாவது தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக வரிந்து கட்டி கொண்டு களப்பணி ஆற்றி வருகிறது. இவர்களுக்கு … Read more

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும பணி நேற்று துவங்கியது. கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இங்கு  பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான் வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதேபோல நெல்லை, … Read more

இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல: வெற்றி உறுதி – விஜயபாஸ்கர் நம்பிக்கை

இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு வேகத்தடையாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பூத் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையிpல் இருந்து செல்லும் அதிமுகவினர் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் எந்தெந்த பகுதியில் வியூகம் எடுத்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் பேசிய … Read more

போதைப் பொருள் ஒழிப்பில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு..!!

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது. தமிழக அரசு போதைப்பொருள் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அப்பொழுது சுற்றறிக்கைகள் வெளியிடுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் பொழுது தமிழக அரசை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார். மேலும் நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பில் … Read more

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு இது தான்..! செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை … Read more