போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்திய வாலிபர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வீரமலை கிராமத்தில் ஒரு கடையின் முன்பு, நேற்று முன்தினம் மாலை, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள், கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள், அவர்களை … Read more

வேலூர்: கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது – பரபரப்பு வாக்குமூலம்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பாலமதி மலையில் பாறை இடுக்கில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், கடந்த 27 ஆம் தேதி பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். இதையடுத்து பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (29.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 29/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 20/18/16 ஆந்திரா வெங்காயம் 14/12 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/13 உருளை 23/18/15 சின்ன வெங்காயம் 60/40/30 ஊட்டி கேரட் 30/25 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/25 கர்நாடக பீட்ரூட் 18/15 சவ் சவ் 12/10 முள்ளங்கி 15/13 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 60/40 … Read more

நாளை நடக்கவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு..!!

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடுதழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், நேற்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை … Read more

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள்புகுந்து ரவுடி வெட்டி கொலை.. 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சங்கர்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது,  வீட்டுக்குள் புகுந்த கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். கடந்த 2017-ம் ஆண்டு அங்குசாமி என்பவர் கொலைக்கு பழிவாங்கும் விதமாக கருப்பசாமி … Read more

தமிழக அரசு சார்பில் புதிதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்

சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக பிப். 1, 2-ம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். ‘‘அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. அதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்வேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு கூட்டங்களிலும் … Read more

எடப்பாடி தூக்கத்தை கெடுத்த சீக்ரெட் டீலிங்… மெகா ஆபரேசனில் இறங்கிய திமுக!

தமிழ்நாட்டு அரசியலில் கொங்கு மண்டலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்த பின்னர் பெரிதும் கவனம் பெற்றது. அதுமட்டுமின்றி எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பலரும் அமைச்சர்களாக பதவி வகித்தனர். எடப்பாடியின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் அதிமுகவை காப்பாற்றியதில் இவர்களின் பங்கு அளப்பறியது. கொங்கு மண்டல செல்வாக்குஇதற்கு முன்பு சென்னை மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலத்தில் தான் அரசியல் களம் சூடுபிடிக்கும். எடப்பாடி வருகைக்கு பின்னர் கொங்கு மண்டலம் அரசியல் முக்கியத்துவம் … Read more

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து விகாஷ் என்பவர் கடந்த 21-ம் தேதி காரில் கோவை சென்றபோது ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல், முஜிப் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

" THE ELEPHANT WHISPERERS" ஆவணப் படத்தில் நடித்த பழங்குடியின தம்பதிகளை பாராட்டிய ஆ.ராசா!

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ள ” THE ELEPHANT WHISPERERS” ஆவணப் படத்தில் நடித்துள்ள பழங்குடியின தம்பதிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள் குறித்த ஆவணப்படம் ” THE ELEPHANT WHISPERERS” என்ற பெயரில் வெளியானது. அந்த குட்டி யானைகளை பழங்குடியின தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி … Read more