போதைப் பொருள் ஒழிப்பு – தமிழக அரசுக்கு பாராட்டு!!

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். கஞ்சா போன்ற பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்ய, தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் உபயோகப்படுத்த தடை உள்ளதாக குறிப்பிட்டார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 … Read more

“அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடு என்ற பெயரில்…” – பெண்களுக்கு கனிமொழி எம்.பி எச்சரிக்கை

மதுரை: “பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இன்னும் முழுமையாக பெறவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். மதுரை இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “கல்லூரி என்பது மிகப்பெரும் கனவை சுமந்து கொண்டிருக்கும் கல்விச்சாலை. மாணவிகளாகிய நீங்கள் பட்டங்களைப் பெற உங்களது பெற்றோர்கள் வாழ்க்கையில் எவ்வளவு … Read more

'கள ஆய்வில் முதலமைச்சர்' – பிப். 1, 2ல் வேலூர் மண்டலத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவது தான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் … Read more

வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (28.01.2023) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் எங்களிடம் அடிக்கடி அறிவுரை கூறுவது என்னவென்றால் ஒருத்திட்டத்தை தொடங்கி வைப்பது மட்டும் … Read more

குண்டும் குழியுமான சாலையை மக்களோடு சேர்ந்து சீர் செய்த காவலர்கள்! குவியும் பாராட்டுகள்

குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலையை இளைஞர்களுடன் இணைந்து சீர் செய்த காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் இருந்து `எப்போதும் வென்றான்’ ஊராட்சிக்கு செல்லும் சாலையில் சில இடங்களில் குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்தன. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வை வளர்க்கும் … Read more

மறுமணத்திற்கு தயாரான நடிகை… தனுஷ் செல்வராகவன் நேரடி மோதல் : டாப் 5 சினிமா

மறுமணத்திற்கு தயாரான நடிகை… தனுஷ் செல்வராகவன் நேரடி மோதல் : டாப் 5 சினிமா Source link

கொடூரம்! பெண்ணின் முகத்தை சிதைத்த போலீஸின் மகன்!!

வேலூரில் உதவி காவல் ஆய்வாளரின் மகன், திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை முகத்தை சிதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமதி மலை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இளம்பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

ஆரணியில் காவல்துறையினரை தரக்குறைவாக விமர்சித்து கோஷமிட்டபடி விடுதலை சிறுத்தை கட்சியினர் அனுமதியின்றி ஊரவலம் நடத்தியதால் பரபரப்பு.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8ம் தேதி அன்று இடம் தொடர்பான புகாரில் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த விடுதலைசிறுத்தை கட்சி மாவட்டசெயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் , ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்து சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதால் கைது செய்யப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விசிக மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரனுக்கு வியாழக்கிழமை … Read more

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம்: பிப்.1, 2-ல் 4 மாவட்டங்களில் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த … Read more

பிப்., 5ஆம் தேதி காலை 9 மணிக்கு… முக்கிய தகவலை சொன்ன முன்னாள் அமைச்சர்..!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி ஐந்தாயிரம் பேர் அதிமுக-வில் இணைய உள்ளனர். அந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள இடத்தை ஆர்பி உதயகுமார், டாக்டர் சரவணன், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர். தொடந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச … Read more