சென்னையில் 81% பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு.. உடனே இதை செய்யுங்க..!

சென்னையில் 81 சதவீதம் பேர் வைட்டமின்-டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. இதுகுறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பிரசாந்த் நாக் கூறுகையில், “நாடு முழுவதும் 27 நகரங்களில் ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் சார்பில் 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின்-டி விகிதத்தை அறியும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 76 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் அத்தகைய … Read more

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது ஏன்? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: மார்ச் 2024-க்குள் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறது. Source link

அமைச்சர்கள் பணம் கேட்டால் குடுக்க மாட்டேனு சொல்றீங்களாம்: பிடிஆரிடம் கேட்ட டி.ஆர்.பாலு!

மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பி டி.ஆர்.பாலு , விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி., அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, “சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சியை … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது: ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருவதாக நீதிபதி தெரிவித்தார். கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமின் கோரிய மனுக்களை விசாரித்தபோது ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி தமிழ்நாடு அரசை பாராட்டினார். போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு … Read more

`கம்யூ. தலைவர் நல்லகண்ணு எப்படி இருக்கிறார்?’- நேரில் சந்தித்தபின் மா.சுப்பிரமணியன் பதில்

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு-வை சந்தித்து நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து செய்தியளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியபோது, “உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ரத்தோரின் மாமியார் ராஜகுமாரி இங்கு 2 வாரங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அந்த அமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். சீர்காழியைச் சேர்ந்த அபிநயா என்ற … Read more

பெரம்பலூர் : ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை பூவாளூர் பகுதியை சேர்ந்த பசுபதி (29) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியாளவில் வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து … Read more

மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து.. டாக்டர் தம்பதி உட்பட 6 பேர் பலி..!

ஜார்க்கண்டில், மருத்துவமனையில் அமைந்த குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி டாக்டர், அவருடைய மனைவி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்துள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் புகை வீடு முழுவதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டில் … Read more

“ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடாவிட்டால் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவிப்பார்” – ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், … Read more

முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் ரயில் பயண சீட்டுகள் பறிமுதல்: கடந்த ஆண்டில் 90 பேர் கைது

நெல்லை: மதுரை கோட்டத்தில் ரயில் பயண சீட்டுக்களை முறைகேடாக விற்ற 90 பேர் கடந்தாண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ரூ.15.44 லட்சம் பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சொத்துக்களை பாதுகாக்கவும், ரயில் சேவை பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் 1957ன் படி ஒன்றிய அரசு ரயில்வே பாதுகாப்பு படையை உருவாக்கியது. ரயில்களில் குற்றங்களை தடுக்கவும், பயணிகளை பாதுகாக்கவும், பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை … Read more