தமிழக செய்திகள்
‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட அந்த வார்த்தையை கேட்ப?’ நீயா- நானா கோபிநாத்தை மிரள வைத்த சீரியல் நடிகை
‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட அந்த வார்த்தையை கேட்ப?’ நீயா- நானா கோபிநாத்தை மிரள வைத்த சீரியல் நடிகை Source link
தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் – எச்.ராஜா..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை வந்து விட்டது. … Read more
பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக நிதித் துறை சார்பில் வளர்ந்து வரும் துறைகளுக்கானதொடக்க நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதிக் கடிதங்களை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக ‘தமிழ்நாடு பட்டியலினத்தவர், … Read more
ஊராட்சி நிதியில் செயலர்கள் முறைகேடு தலைவர்களிடம் பணம் வசூலிக்க இடைக்காலத்தடை
மதுரை: ஊராட்சி நிதியில் செயலர்கள் முறைகேடு செய்த பணத்தை, தலைவர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சித் தலைவர் சக்திவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி செயலர் பல லட்சம் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து நான் முறையாக புகார் அளித்துள்ளேன். இதன்பேரில், முறைகேட்டுக்குரிய பணத்தை செலுத்துமாறு ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் ெகாடுக்கப்பட்டது. ஆனால், … Read more
தெருக்களில் அலைந்த நாய்க் கூட்டம் – புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் தடுப்பூசி முகாம்
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைந்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அங்குள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அதனைச் சுற்றி ஏராளமான கிராமங்களும் அமைந்துள்ளன. குறுகிய சாலைகளாக அமைந்துள்ள களக்காடு மெயின் பஜார் பகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் அளவுக்கதிகமான நாய்கள் … Read more
நல்ல வருமானம் தந்த டாஸ்மார்க் ஊழியர்களின் சான்றிதழை திரும்பப் பெற்ற மாவட்ட நிர்வாகம்…!!
குடியரசு தின விழாவில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்குவது வழக்கம். நேற்று இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டு … Read more
28 வயது விதவை மருமகளுக்கு வாழ்க்கை கொடுத்த 70 வயது மாமனார் …!
கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மருமகளை பூஜா (வயது 28) சமீபத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் … Read more
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 4 நாட்களே அவகாசம்
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் … Read more