நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர்.  அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜனவரி 28ம் தேதி) அனைத்து பள்ளிகளுக்கும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கடந்த வடகிழக்கு பருவ மழையின் பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு … Read more

சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பீதி!!

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மதியம் 12 மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 2 விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நில அதிர்வால் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள், மின்விசிறி, டிவி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அதிர்ந்ததாகக் … Read more

ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!

பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், மனோபாலா, கார்த்தி, ராதா ரவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்தும் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 1976ம் ஆண்டு முதல் ஜூடோ ரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், … Read more

சென்னை பல்கலை.யில் தடையை மீறி மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள்

சென்னை: தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர். பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று (ஜன. 27) சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்க்கும் நிகழ்வு … Read more

ஈரோடு கிழக்கு: எடப்பாடி லிஸ்டில் 3 பேர்; வெளியாகும் அதிமுக வேட்பாளர் பெயர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பலகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தேர்தல் பணிக்குழு முன்னதாக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அவர்கள் உடனடியாக ஈரோட்டிற்கு விரைந்து … Read more

மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சேலம்: மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.105.65 கோடி மதிப்பீட்டிலான 291  முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 26,649 பயனாளிகளுக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் சேலம், மாசிநாயக்கன்பட்டியில் இன்று (27.01.2023) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ. 105.65 … Read more

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கூலி தொழிலாளியான இவர் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளதில், தற்போது மகேஸ்வரி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பாண்டியன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, செஞ்சியில் இருந்து தேசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இவருடைய இருசக்கரவாகனத்தின் … Read more

புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்.. காரணம் என்ன தெரியுமா..?

தூத்துக்குடி அருகே, கந்துவட்டி கொடுமையைக் கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளியமரத்தில் தலைகீழாக தொங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் அய்யலுசாமி. வழக்கறிஞரான இவர் காங்கிரசின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யலுச்சாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்கப்படவேண்டும். மேலும், கந்துவட்டி சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை … Read more

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வட மாநிலத்தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். வெப்படை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள நூற்பாலைகளில் வட மாநிலத்தொழிலாளர்கள் 60,000 பேர் பணியாற்றி வருகின்றனர். நூற்பாலை ஒன்றில் தங்கி பணியாற்றிவந்த பீகாரை சேர்ந்த மனிஷ் குமாரையும், சத்தீஸ்கரை சேர்ந்த சதார் பஸ்வானையும், ரகசியத் தகவலின்பேரில் போலீசார் சோதனையிட்டபோது, ஒரு நாட்டு துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் சிக்கின. விசாரணையில், இருவரும் 7 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தங்கியதும், முகவரியை தமிழகத்திற்கு மாற்றியதோடு, … Read more