தூத்துக்குடி: பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சஞ்சய் பாரதி (16) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சஞ்சய் பாரதிக்கு சரியாக படிப்பு வராததால், பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளான். … Read more

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவை வடவள்ளி சேர்ந்த ஸ்ரீவித்யா..!!

தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது. அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த … Read more

74-வது குடியரசு தினம் | சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது: திருப்பூர் முதலிடம்

சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி, திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு, சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி, மாநிலத்தில் உள்ள சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான முதலமைச்சர் விருதுக்கு திருப்பூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதில் சிறந் காவல் நிலையத்துக்கான முதல் … Read more

74வது குடியரசு தின விழா: தேசியக்கொடி ஏற்றியாச்சு… தேநீர் விருந்தில் என்ன நடக்கப் போகிறது?

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக ’தமிழ்நாடு’ என்ற குறிப்பிடாமல் ’தமிழகம்’ எனப் பேசி சர்ச்சையை கிளப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசியல் சர்ச்சை இந்த விவகாரத்தில் ஆளும் திமுக முதல் எதிர்க்கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் … Read more

"கலைஞர் வச்சி செய்வார்; ஸ்டாலின் கூப்பிட்டு வச்சி செய்வார்" – எம்.பி ஆ.ராசா பேச்சு

“எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் கலாச்சாரம் என்பது வேறு. ஆனால் ஒன்றிய அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் வரும்போது அதனை பாதுகாக்கும் பொறுப்பில் நாங்கள் முதலில் இருக்கிறோம்” என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்  பொதுக்கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா பேசினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் கூட்டம் மாணவரணி அமைப்பாளர் விஜய ஆனந்த தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (26.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 26/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 16/15 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 70/50/40 ஊட்டி கேரட் 30/25/20 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 25/20 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 20/17 சவ் சவ் 12/12 முள்ளங்கி 20/15 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 70/50 … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று (ஜன.25) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விருப்பமனுவை, உங்களிடம் கூறி விட்டு தான் நாங்கள் வாங்குவோம். எங்களுடன் … Read more

நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது ஆளுநர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார் Source link

74வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

சென்னை: 74வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெகிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் … Read more