தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு 

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது வரவேற்கதக்கது.உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை … Read more

தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை -கோயில் திருவிழாக்களில் புதிய விதிகள்!

நெமிலி கிரேன் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகில் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெமிலியை அடுத்த கீழ்வீதியில் உள்ள மண்டியம்மன் … Read more

சமூக சேவகர் கொலை வழக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 பேருக்கு ஆயுள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் சாலை ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ்மோகன்சந்திரா (55). சமூக சேவகர். மேலும், பல்வேறு பொது நலன் வழக்குகளையும் தாக்கல் செய்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2.7.2012 காலை 6 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிங்கமுக தீர்த்தம் அருகே பைக்கில் சென்ற ராஜ்மோகன் சந்திராவை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன், அவரது தந்தை வீராசாமி, அண்ணன் செல்வம், … Read more

‘எக்ஸ்கியூஸ் மீ… குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா?’ இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி

‘எக்ஸ்கியூஸ் மீ… குட்கா துப்பணும்; வின்டோவ திறக்க முடியுமா?’ இண்டிகோ விமானத்தை அலறவிட்ட பயணி Source link

திடீர் சோதனை… தடை செய்யப்பட்ட பொருள் சிக்கியது.. எச்சரிக்கும் அதிகாரிகள்..!!

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுரேஷ், சிவராஜ், ஆய்வாளர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ராஜன் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.  இதனை அடுத்துடுத்து பெட்டிக்கடையின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை … Read more

போடி – சென்னை ரயிலில் முழுவதும் முன்பதிவு பெட்டிகள்: தேனி மாவட்ட மக்கள் அதிருப்தி

போடி: சென்னையில் இருந்து மதுரை வரை வரும் அதிவேக ரயில் பிப்ரவரி 19 முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் அனைத்தும் முன்பதிவு பெட்டிகளே உள்ளன. ஆகவே பொதுப்பெட்டிகளையும் இதில் இணைத்து இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் போடி வரை பணிகள் … Read more

கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு அதிகாரம் இல்லையா?

அதிமுக முன்னாள் எம்.பி. – கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த … Read more

ராணுவ கல்லூரியில் புகுந்த சிறுத்தை

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையொட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, ராணுவ கல்லூரிக்குள் நடமாடுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ராணுவ கல்லூரியின் தகவலையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : வழி தெரியாமல் திண்டாடிய மூதாட்டி.! மனிதாபிமானத்துடன் நடந்த பொதுமக்கள்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருகே வடசித்துர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி பொன்னம்மாள் தம்பதியினர். இதில், பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், பொன்னாம்மாள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் தங்கி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், பொன்னம்மாளிடம் அவரது சகோதரி ரூபாய் 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தற்போது பொன்னம்மாளுக்கு பணம் தேவைப்படுவதால், அந்த பணத்தை வாங்குவதற்காக பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிக்கும் அவரது சகோதரியை தேடி வந்துள்ளார்.  ஆனால், … Read more

எதிரிகளுக்கு மிரட்டல்; சீறிப் பாயும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர்: வைரல் வீடியோ

எதிரிகளுக்கு மிரட்டல்; சீறிப் பாயும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வாகிர்: வைரல் வீடியோ Source link