சிவகங்கை : கார் கவிழ்ந்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி

சிவகங்கை மாவட்டத்தில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியை சேர்ந்தவர் உதய அரசன். இவருடைய மனைவி மேனஸ்கா. இவர்கள் இரண்டு பேரும் தங்களது இரண்டு வயது மகனுடன் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பத்தூர் அருகே சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு சாலையை விட்டு விலகிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்த விபத்தில் பயணம் … Read more

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை.. திரைப்பட தயாரிப்பாளர் கைது..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். 27 வயதுடைய அவர் அளித்த புகாரில், தனக்கு அவதூறு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதன்படி, அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கி, அதன் வழியே அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகாத செய்திகள், வீடியோக்களை அனுப்பி அவதூறு ஏற்படுத்தி உள்ளனர். வேறு சில சமூக ஊடகங்கள் வழியேயும் அவதூறு பரப்பப்பட்டு உள்ளது … Read more

தெரு மின் விளக்குகளை அணைத்துவிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பிடித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே தெரு மின்விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஒரு வீட்டில் திருட முயற்சி செய்தபோது வீட்டின் உரிமையாளர் அதனைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து பழையக் கட்டடம் ஒன்றில் பதுங்கி இருந்த கனகராஜை பிடிக்க சென்றபோது ஓட முயற்சித்து கீழே விழுந்த நிலையில், பொதுமக்கள் … Read more

தை அமாவாசை | சதுரகிரியில் 15 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்: மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவை பக்தர் உயிரிழப்பு

விருதுநகர்: தை அமாவாசை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலையேறும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவை பக்தர் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களை ஒட்டிய 4 நாள்கள் மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி … Read more

இடைத்தேர்தல்… அண்ணாமலை டிமாண்ட்… சம்பவம் செய்வாரா ஈபிஎஸ்..?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது, பிரச்சாரத்துக்கு தயாராகுவது குறித்த ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று 2-வது நாளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பணி இன்னும் மூன்று … Read more

தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

தை அமாவாசை 2023: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் இந்த முறை சனிக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. ஏனெனிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில், மக்கள் முன்னோர்களின் ஆசி பெற தர்ப்பணம் கொடுத்து தானங்களை செய்யும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் … Read more

ரூ.612 கோடியில் அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை நெருங்குகிறது: விரைவில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு

மதுரை: மதுரை நத்தம் சாலையில் அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் இடையே 7.4 கி.மீ. நீள பறக்கும் பால பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து அந்த சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலையில், ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில், மதுரை அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.4 கி.மீ தூரத்திற்கு … Read more

சேலம் : கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையில் மனைவி தீக்குளிப்பு.!

சேலம் மாவட்டத்தில் கணவனிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி மனமுடைந்து நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம் … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா ஈவிகேஎஸ் இளைய மகன்..?

ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள். நேற்று முதலே தேர்தல் பிரசார வேலைகளை திமுக தொடங்கியிருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சிக்காரன் என்ற அடிப்படையில் முதல்வருக்கும் திமுகவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று நினைக்கிறேன். இளைய மகன் சஞ்சய் … Read more

ஊராட்சி மன்றத்தலைவரின் கார் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி மன்றத்தலைவரின் கார் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதனூர் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த தமிழ் அமுதன் புதிதாக மூன்று கார்களை வாங்கி தன் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மர்ம நபர்கள் புதிய கார் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த நிலையில், சிசிடிவியில் கார் எரிவதை பார்த்த ஊராட்சி மன்றத்தலைவர், உடனே வெளியில் … Read more