கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் தமிழக மாநில செயற்குழு மற்றும் மையக்குழு கூட்டம் கடலூரில் இன்று (ஜன.20) நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர் கலந்து கொண்டுள்ளனர். செயற்குழுவை தொடர்ந்து, மாலையில் மையக்குழு கூட்டம் நடக்கிறது. ஈரோடு … Read more

ஜல்லிக்கட்டு விளையாட்டில்லை, வன்முறை..! தடை செய்க – கவிஞர் தாமரை

ஜல்லிக்கட்டு காளையை வீழ்த்தி வீரப்பட்டம் வாங்குவது கேவலத்திலும் கேவலம் என்று கவிஞர் தாமரை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பது; பொங்கல் வாழ்க மாடுபிடிக் கொடுமை வீழ்க ! சல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம். ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக் காலம் சிந்தனைகள் மாறிவருகின்றன என்பதை மறந்து விடலாகாது. மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்ததே அவ்வகைச் … Read more

Erode By Election Candidate: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிடும்! ஜிகே வாசன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (20-01-2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. கலந்தாலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள … Read more

கும்பாபிஷேகத்திற்கு ஆயத்தமாகும் கரபுரநாதர் திருக்கோயில்: அவ்வையுடன் மூவேந்தர்கள் வழிபட்ட ஆயிரமாண்டு பழமையான திருத்தலம்

* அவ்வையாருக்கு சிலை வைத்த பெருமிதம்* புதிய நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏற்பாடு சேலம்: சேலத்தில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதில் புதிய நுழைவு வாயில் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், திருமணி முத்தாற்றின் கரையில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில். தமிழகத்தில் சாய்ந்த கோலத்தில் சிவன் அருள்பாலிக்கும் ஒரே கோயில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1200 … Read more

அதிரடி உத்தரவு! பட்டியலினத்தவர் கொடி ஏற்றுவதை உறுதி செய்க!!

குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியக் கடிதத்தில், எவ்வித புகார்களுமின்றி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிரச்னைக்குரிய 15 இடங்களில் சாதி பாகுபாடின்றி குடியரசு தின விழாவை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் … Read more

வாடகைக்கு வீடெடுத்து தங்கி, கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் கைது..!

திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி கனகராஜுடன் கொழுமம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பிரிண்டர் மிஷினில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூணாறில் உள்ள சி.டி.எமில், கள்ள நோட்டுகளை சோதனை செய்யும் விதமாக கனகராஜ் தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், … Read more

சென்னை | உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் முதல் கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன.26-ம் தேதிகொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும். ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம்..!!

திருவள்ளூர்: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆண்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெறுகிறது.

`அவனையும் குடிக்க வைத்து பாழாக்குறியே…’- இளைஞரை கொலை செய்த உறவினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை கொலை செய்ததாக இருவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிப்பந்திகாலனி பகுதியில் வசிக்கும் ராஜ் – மாரியம்மாள் தம்பதியினரின் மகன் சேதுராஜ் (18). கூலி வேலை செய்து வந்த இவர், கடந்த 16 ஆம் தேதி வாழக்குளம் கண்மாய் நீரில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து தீயனைப்புத் துறையினர் உதவியுடன் அவரை மீட்ட மம்சாபுரம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு … Read more

திருமதி தென்னிந்திய அழகி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து கோவை பெண் சாதனை.!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் பேகாசஸ் குளோபல் நிறுவனம் சார்பில் திருணமான பெண்களுக்கான திருமதி தென் இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டிக்கு தென் இந்திய மாநிலங்களிலிருந்து திருமணமான பெண்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்று இறுதிச்சுற்றுக்கு பதினான்கு போட்டியாளர்கள் தேர்வானார்கள். அவர்களில், கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து ஷாலு ராஜ் திருமதி தென் இந்திய அழகி போட்டியில் இரண்டாவது இடத்தையும், திருமதி தமிழ்நாடு … Read more