பட்டியலின மக்களை மறந்த திருமா? பிக்பாஸ்க்கு வாக்கு சேகரிப்பு.. கொதிக்கும் நெட்டிசன்கள்

ள்புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் குற்றம் சுமத்துவதாக பரபரப்பான … Read more

கருத்து வேறுபாடு இருந்த நிலையில் ஒன்றிய அரசால்தான் அதிமுக ஆட்சி நீடித்தது: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: ‘ஒன்றிய அரசு உதவியால்தான் அதிமுக ஆட்சி 4 ஆண்டு நீடித்தது’ என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார்  நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்று தான். அதில்  வித்தியாசம் ஒன்றும் இல்லை. பாஜ மக்களவை தேர்தல் பணியை துவங்கி விட்டது. ஒன்றிய அமைச்சர் விகே சிங் வருகிற 27, 28, 29 தேதிகளில் வருகிறார். … Read more

கொலிஜியம் விவகாரத்தில் நான் கடிதம் அனுப்பியதை பிரச்சினையாக்குவது சரியல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுச்சேரி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தை பலரும் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்குகின்றனர் என்று புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை வகித்து அடிக்கல் நாட்டி … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை – ரவுடிகள் அளித்த பதில்!

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதி அளித்தார். அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் … Read more

தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

கோவை: ‘தமிழ்நாட்டில் 4 லட்சம் பேருக்கு ஒன்று வீதம் உள்ள தாலுகா அலுவலகங்கள் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கப்படும்’ என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘4  லட்சம் பேருக்கு ஒரு … Read more

மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் … Read more

தமாகா போட்ட ஸ்கெட்ச்… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சரவெடி!

தமிழ்நாடு அரசியல் களம் ஈரோட்டை நோக்கி திரும்பியிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் போட்டியிட்டார். இவர் 58,396 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தை விதி உடனடி அமல்: தலைவர்கள் சிலைகள் மூடல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக  மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள்,  சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி நடந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: இத்தொகுதியில் 52 இடங்களில் 238 … Read more

ஜி.கே வாசனுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி?

ஜி.கே வாசனுடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க போட்டி? Source link