ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாம்: விவசாயிகள் அச்சம்

ஓசூர்: ஓசூர் அருகே, குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ள காட்டு யானைகள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு, அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இந்நிலையில், நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, சானமாவு வனப்பகுதிக்கு 5 குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. இந்த யானைகள், தற்போது போடூர்பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன. தகவலறிந்து வனத்துறையினர், … Read more

ஒரே நாளில் சென்னையில் காணாமல் போன 17 குழந்தைகள் மீட்பு! 

சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து சென்னை மாநகர காவல் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக, உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் இரு தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.  மணற்பரப்பில் செல்லக்கூடிய All Terrain Vehicle … Read more

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மனநோய், தூக்க மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: தமிழக அரசு

சென்னை: மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய்க்கான மருந்துகள் மற்றும் தூக்கத்துக்கான மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர். அதில் சென்னை, … Read more

ஸ்டாலின் ஸ்மார்ட் பாலிட்டிக்ஸ்… குடியரசு தின விழாவில் ஆளுநர் ரவிக்கு காத்திருக்கும் அவமானம்!

நிகழாண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் வழக்கம்போல் துவங்கியது. ஆனால் அன்றைய தினம் வழக்கம்போல் முடியவில்லை. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு, தமிழகம் அமைதி பூங்கா, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி போன்ற ஆளும் திமுகவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வார்த்தைகளை கவனமாக தவிர்த்து உரையாற்றினார் ஆளுநர். அத்துடன் அவர் நின்றிருந்தால் கட பரவாயில்லை. ஆனால் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் பெயரைகூட உச்சரிக்காமல் தவிர்த்ததை … Read more

கொரோனா ஊரடங்கில் ஆதரவற்று தவித்த பெண் ஓராண்டிற்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

நெல்லை: தூத்துக்குடி  மாவட்டம், சாத்தான்குளம் அருகே நன்னீர்குளத்தை சேர்ந்தவர்  உஷாராணி (44). இவரது மகன் ராகேஷ் (24), மனைவி மற்றும் குடும்பத்துடன்  திருவனந்தபுரத்தில் தங்கி, ஓட்டலில்  வேலை பார்க்கிறார். நன்னீர்குளத்தில் தனியாக இருந்த உஷா ராணி, 2021  டிசம்பரில் கொரோனா பரவலின்போது நெல்லை  அருகே கொண்டாநகரம் பகுதிக்கு வந்தவர் ஆதரவற்று தவித்தபடி நின்றார். அவரை கண்டியப்பேரி ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்துப்  பராமரித்தனர்.  இதனால் அவர் படிப்படியாக உடல்நலம் மற்றும் மனநலம் தேறினார்.  இதையடுத்து உஷாராணியிடம் … Read more

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க தனித்துப் போட்டியா? 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழுவை அறிவித்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க தனித்துப் போட்டியா? 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழுவை அறிவித்த அண்ணாமலை Source link

தனியார் சர்க்கரை ஆலை விவகாரம்: ஜன.21-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம்: திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து சாமி.நடராஜன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ”தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி மற்றும் கடலூர் மாவட்டம் சித்தூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைகள், கடந்த 2019-ம் ஆண்டு முதல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் மூடி கிடக்கிறது. இதில் திருமண்டங்குடி சர்க்கரை … Read more

நீட் வழக்குகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் மருத்துவத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது. நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டி: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை செல்லும் பெருந்துறை சாலையானது ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக … Read more

காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் 235 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்குப் பின் சென்னை கடற்கரைகளில் 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, மெரினா கடற்கரையில் கூடுதலாக 103 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, 45 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் எடுத்து செல்ல ஒரு ‘காம்பேக்டர்’ வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 50 குப்பை தொட்டிகளும், 20 … Read more