சசிகலாவுக்கு டெல்லி வைத்திருக்கும் பிளான்: இருவருக்கும் லாபம்.. தூது செல்வது யார்?

தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பத்திரிக்கையாளர்களோடு அண்ணாமலை மல்லுகட்டி வரும் நிலையில் டெல்லி பாஜகவின் கவனம் சசிகலா மீது திரும்பியுள்ளதாம். சசிகலா செய்தது என்ன? அதிமுகவில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நிற்பவர்களை மீண்டும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று தன்னை நோக்கி மைக் நீட்டப்படும் போதெல்லாம் கூறிவருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை அவரே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் காலி செய்தார். புரட்சி பயணம் என்னாச்சு?தேர்தல் முடியும் வரை அரசியலிலில் … Read more

Pongal Gift Hamper: பொங்கல் பரிசு பெற குவிந்த மக்கள்! இது திமுக உறுப்பினரின் பரிசு

Pongal Gift Hamper: காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன்  பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் திமுக பொதுக்குழு உறுப்பினரின் செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரும் , பிரபல தொழிலதிபருமான  எஸ்.கே.பி.சீனுவாசனின் மனைவி திருமதி சாந்திசீனுவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வது வார்டு  மாமன்ற உறுப்பினராகவும், மண்டல … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு.. உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.!

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில், நேற்று முன்தினம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற வீரரை காளை முட்டியதில் உயிரிழந்தார். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது … Read more

திருமண வரவேற்பில் திடீரென உயிரிழந்த மணப்பெண்!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பதாயிக்கர பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணான பாத்திமா பதூல் என்பவருக்கும், மூர்க்க நாடு எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணப்பெண் பாத்திமா மிக்க மகிழ்ச்சியுடன் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். பதறிப்போன இருவீட்டாரும் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்… முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்ற அண்ணன்-தம்பி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை அண்ணன்-தம்பி வென்று வாகை சூடினர். அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவும், விசில்கள் பறக்க, ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே 825 காளைகளும், 303 காளையர்களும் களமிறங்கி களத்தை விறுவிறுப்பாக்கினர். களத்தில் தீரம் காட்டி விளையாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் தங்க நாணயங்களை வென்ற நிலையில், விளாங்குடி கல்லூரி மாணவி … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார்

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் அதிகபட்சமாக 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார், நாட்டு இனப் பசு பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தை முதல் நாளில் அவனியாபுரத்திலும், 2-ம் நாளில் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு … Read more

அம்பத்தூர் தொழில்பேட்டையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம்

அம்பத்தூர் தொழில் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், ரூ.10 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் … Read more

முதியவரை ஒரு கிலோ மீட்டர் சாலையில் இழுத்துச் சென்றவர் கைது!!

கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பைக்கில் சென்ற நபர் இழுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பைக் ஓட்டுனர், முதியவரின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர், பைக்கை … Read more

பட்டாசு வெடித்து மாடி வீடு இடிந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கி கணவன்-மனைவி உயிரிழப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டாசு வெடித்து மாடி வீடு இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். வீரக்கல்லைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் பட்டாசு கடை வைத்திருந்தார். நேற்று மாலையில் குழந்தைகள் வெளியே விளையாட சென்ற நிலையில் ஜெயராமன் மற்றும் மனைவி நாகராணி ஆகியோர் மட்டும் மாடியில் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கரமாக வெடித்ததில் மாடி வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி போனது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 6 மணி … Read more