பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூதப்பாண்டி: பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமியம்மள் கோயிலில் கடந்த 22ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள‌ இசை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா  துவங்கியது. இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடந்தது. 23ம் தேதி முதல் நேற்று இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 5 மணிக்கு நான்காம் … Read more

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர்; புறக்கணித்த கூட்டணிகள் – ஓர் தொகுப்பு!

நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.‌ சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் … Read more

ராகுல் யாத்திரை நிறைவு விழாவை புறக்கணிக்கும் ஜே.டி (யு); எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை

ராகுல் யாத்திரை நிறைவு விழாவை புறக்கணிக்கும் ஜே.டி (யு); எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை Source link

நாளை (27.01.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை (ஜனவரி 27ம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை ( ஜனவரி 27 ஆம் தேதி) நடைபெற உள்ளது. இதனையடுத்து குடமுழுக்கு நடைபெறும் … Read more

நாளை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!!

குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இயக்குவதற்கு தடை விதித்து பழனி நகராட்சி ஆணையர் கமலா உத்தரவிட்டுள்ளார். உலகப் பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜனவரி 27, 2023) குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைய வழியாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் முதற்கட்டமாக 2,000 பேருக்கு அனுமதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் குறுஞ்செய்தியை காண்பித்து … Read more

தூர்வாரப்படும் அடையாறு: கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது. 2021-ல் ரூ.21 கோடி செலவில் அடையாறு ஆறு கடலில் சேரும் பகுதி முதல் திரு.வி.க பாலம் வரையிலான பகுதிகளை அகலப்படுத்தி தூர்வாரும் பணியை மேகொள்ள மாநில பொதுப்பணித்துறை முடிவு செய்து திட்டத்தை தயார் செய்தது. அடையாறு ஆற்றில் நீரின் போக்கு மற்றும் அது தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

106 பேர் கொண்ட எடப்பாடி டீம்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தீயாய் இறங்கிய அதிமுக!

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. யாரெல்லாம் போட்டியிடவுள்ளனர்? எந்தெந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன? என படிப்படியாக அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருக்கிறது. வேட்பாளருடன் பிரச்சார களத்தில் திமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். அதிமுகவில் 2 வேட்பாளர்கள் எனவே எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே வேட்பாளரை நிறுத்த முடிவு … Read more

மண்டல அளவிலான வாலிபால் போட்டி: நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சாதனை

நாகர்கோவில்: தமிழ்நாடு அரசு உயர் கல்வி துறையின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான இன்டர் பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் திருநெல்வேலி மண்டல அளவிலான வாலிபால் போட்டி சேரன்மகாதேவி ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. பல்வேறு கல்லுரி அணிகள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலபதக்கம் பெற்றது. அணியில் விளையாடிய மாணவர்களை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுகநயினார், துணை முதல்வர் சில்வியாஹனா,  … Read more

ஹாங்காங் டூ புதுக்கோட்டைக்கு பறந்துவந்த காதல்! தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இன்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு காண்போரை மகிழ்வில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி உமா. இவர்களது மகன் காத்த முத்து (எ) மணிகண்டன். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு … Read more