இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் – ஓபிஎஸ்

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா … Read more

கமுதி அருகே உள்ள கிராமத்தில் இருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் 200 டன் சம்பா மிளகாய்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் என்பவர் தனது தோட்டத்தில் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார். இவரது வயலில் விளையும் சம்பா மிளகாயை தொடர்ந்து 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்துவரும் சம்பா மிளகாயை, கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவில் … Read more

குட்கா தடை நீக்கமா? தமிழ்நாடு போதைக்காடாகி விடும்!  தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி இராமதாஸ்!

தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் … Read more

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல்.. கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24) என்ற மகளும், ஜேக்கப் (22) என்ற மகனும் உள்ளனர். இதில் ரமேஷ்குமாரின் மனைவியான ரோஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். … Read more

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வகுடிகள் கொண்ட … Read more

குலதெய்வ வழிபாடு… டிக் அடிக்கும் ஈபிஎஸ்; அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பும் வேட்பாளர்களை களமிறக்க தீவிரம் காட்டி வருவதால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தேர்தல் பணிக்குழு இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள … Read more

பாஜ கம்பத்தில் தேசியக் கொடி

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. இதில் பாஜக கொடி கம்பமும் உள்ளது. இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இன்று காலை இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், பேருந்தில் அந்த வழியாக சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேசியக்கொடியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் பாஜகவினர் கட்சி கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளனர். … Read more

`அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்'- அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, இன்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் ஜி-20 கல்வி கருத்தரங்கில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து … Read more