விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. 9 காளைகளை அடக்கியவர் பலியான பரிதாபம்..!

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப் பார் என்ற தீரத்துடன் திமிலை சிலிர்த்துக் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை தங்களது வீரத்தாலும், நுணுக்கங்களாலும் காளையர்கள் கட்டுப்படுத்தினர். வீரத்தை வெளிப்படுத்தி பெற்ற வெற்றிக்கு உடனுக்குடன் தங்கக் காசு, லேப்டாப், குக்கர், டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சுவாரசியமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் … Read more

17-வது ஆண்டாக பாட்டி வருகை, போட்டியில் ‘ஆள் மாறாட்டம்’… மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

மதுரை: சென்னையில் இருந்து 17-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 80 வயது மூதாட்டி முதல் ஆள் மாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் வரை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்தவற்றை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு. சென்னை வண்டலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம்மாள், கடந்த 17 ஆண்டாக பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து பஸ் அல்லது … Read more

கடலை ரசிக்க பாம்பன் பாலத்தில் காருடன் நின்ற சுற்றுலா பயணிகள்… திடீரென ஏற்பட்ட பிர்சனை!

தொடர் விடுமுறையை ஒட்டி அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பாம்பன் பாலம் வழியாக சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது கடலின் அழகை ரசிப்பதற்காக பாம்பன் பாலத்தில் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள், மற்றும் அரசு பேருந்துகள் பாம்பன் … Read more

வரையாட்டின் கொம்பை பிடித்து துன்புறுத்திய 2 இளைஞர்கள் கைது..!!

கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சி ஆனைமலை குளிகை காப்பக பங்கு வனப்பகுதி உட்பட்ட டாப்ஸ்லிப் மற்றும் வால்பாறை பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு அதிக அளவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பணிகள் வருவது வழக்கம்.  பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அதிக அளவில் காணப்படுகிறது. அரிய விலங்கான வரையாட்டை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறையினர் தீவிரமாக … Read more

அதிரடி உத்தரவு! பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே … Read more

நாடாளுமன்றத்தில் சரியாக செயல்படாத தமிழக எம்.பி.க்கள் யார் யார்?

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கமும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயகுமாரும் சரியாக செயல்படவில்லை என நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? – எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் … Read more

சிக்கலில் தலைவாசல் கால்நடை பூங்கா: அரசுக்கு எடப்பாடி விடுத்த வார்னிங்!

சேலம் மாவட்டம் சிறுவாச்சூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. இவை எதுவுமே மக்களுக்கு உணவளிப்பது இல்லை. விவசாய தொழில் ஒன்று தான் உணவளிக்கிறது. தை பிறந்து விட்டது. அதிமுகவிற்கு வழி பிறந்து விட்டது. சிறுவாச்சூர் பொங்கல் விழா சிறுவாச்சூரில் உள்ள எலந்தவாரி … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் மாடு முட்டியதில் படுகாயம்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்க உறவினர்களுடன் வந்தபோது சிறுவன் சஞ்சய் (16) மாடு முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளார். பலத்த காயம் அடைந்த கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.