மெரினாவில் காணும் பொங்கல்: வெயிட்டான ஏற்பாடு… இந்த வாட்டி பலே பலே!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக காணும் பொங்கல் தினத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடப்பாண்டை பொறுத்தவரை கொரோனா அச்சம் இல்லாத காணும் பொங்கலாக மாறியுள்ளது. எனவே சென்னையின் கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து செல்வர். சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் உள்ள அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, … Read more

திமுகவுக்கு திரும்புகிறாரா மு.க. அழகிரி… உதயநிதி சந்திப்புக்கு பின் தகவல்

MK Alagiri Udhayanidhi Meetup: மதுரை அலங்காநல்லூரில் தைத்திருநாளை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடக்கிவைக்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று விமானம் வழியாக மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் டிவிஎஸ் நகரில் உள்ள தனது பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார்.  வீட்டிற்குள் நுழையும் முன்பே … Read more

திமுகவினரிடம் லஞ்சம்.. வீடியோ வைரலானதால்.. போலீசுக்கு ஏற்பட்ட கதி.! 

சென்னை பெருங்குடியில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு திமுக நிர்வாகிகள் கையூட்டு பணம் கொடுத்துள்ளனர். இந்த பணத்தை போலீசார் பெற்றுக் கொண்டபோது யாரோ மறைவாக வீடியோ எடுத்து … Read more

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பான விமான நிலையம்!!

24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். அதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பர். இந்நிலையில், திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, விமான நிலைய … Read more

திரைத்துறையில் சாதித்த மக்கள் திலகம்..!

மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற புகழ்வாய்ந்த, தலைவர்களில் ஒருவரான எம்ஜிஆர்ருக்கு இன்று பிறந்தநாள்…. வலிமையான அரசியல் தளத்திற்கு இட்டுச் சென்ற அவரது திரைப்படங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு… சினிமாவை பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியை சரியாக உள்வாங்கிக் கொண்டு தமது திரைப்படங்களில் புகுத்தியவர் எம்ஜிஆர். பகுத்தறிவையும் சமத்துவத்தையும் பறைசாற்றும் கதைகளையே அவர் தேர்வு செய்து நடித்தார். தெய்வத்தின் இடத்தில் தாயை மாற்றாக வைத்து இயற்றப்பட்ட பாடல்களும், வசனங்களும் எம்ஜிஆருக்கு தாய்க்குலத்தின் … Read more

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை: பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். … Read more

குடும்பத்தை கூல் செய்த உதயநிதி: முக்கோண மோதலுக்கு தயாராகும் மதுரை திமுக?

ஒருவேளை அழகிரியின் ரீ என்ட்ரி விரைவில் அமைந்தால் மதுரை திமுக முக்கோண யுத்தத்துக்கு தயாராகிவிடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. பாதையை மாற்றிக் கொண்ட அழகிரி2020 வரை திமுகவுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் அவ்வப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வாடிக்கையாகக் கொண்டிருந்தார் மு.க.அழகிரி. ஆனால் ரஜினிகாந்த அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னர் மு.க.அழகிரி அரசியல் ரீதியாக பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். தேர்தல் சமயத்தில் சமாதான தூது!2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் … Read more

பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார். பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக … Read more

ஆளுநருக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கை ஆக்சனுக்கு ஏற்ற ரியாக்சன் – கார்த்திக் சிதம்பரம்

ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், ஆளுனராக நாகலாந்தில் பல குழப்பங்களை செய்துவிட்டு தண்டனை பணியாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்தான் தமிழக ஆளுநர் ரவி. ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என தெரிவித்தவர் தொடர்ந்து… சேது சமுத்திர திட்டத்தை அதன் இயற்கை தன்மை பாதிக்கப்படாதவாறு கவனமுடன் நிறைவேற்ற வேண்டும். எடப்பாடி … Read more