ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: “நான் சர்வாதிகாரி இல்லை. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். … Read more

ஈபிஎஸ், ஓபிஎஸ் – ஐ சந்திக்கும் சசிகலா… அனல் பறக்கும் தேர்தல் களம்..!

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முக்குலத்தோர் வாக்குக்களை தட்டி தூக்க சசிகலாவுடன் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இரு பிரிவாக பிரிந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. முதலாவது, ஆளுநர் ரவி அரசியல் செய்து வருவதாகவும், சட்டசபையில் அவரது உரை குறித்தும் … Read more

Happy Pongal 2023: சென்னையில் இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்கள்! திருத்தணி திருக்கடையூர் வீதியுலா

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் மட்டுமல்ல, சென்னை போன்ற நகரங்களிலும் இளவட்டக்கல் தூக்குவது போன்ற வீரத்தை காட்டும் போட்டிகள் நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. சென்னையை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சி சார்பில் மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.  படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஏற்பாடு செய்திருந்த இந்த சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என மூன்று … Read more

டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் யானை பொங்கல்

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறை சார்பில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் கும்கி ஆப்ரேஷன்கள் மற்றும் பல்வேறு வனத்துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, யானை பொங்கல் நிகழ்ச்சி வனத்துறை மற்றும் மலைவாழ் … Read more

அப்பள தகராறில் கணவன்மீது எண்ணெய் ஊற்றிய வழக்கு – தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம்

உணவுக்கு அப்பளம் பொறித்து தருவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் ரசித் என்பருவக்கும் அவரது மனைவி ஆயிஷாவிற்க்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின்போது, கணவர் அப்துல் ரசித், மனைவியிடம் அப்பளம் பொறித்து தருமாறு கேட்டுள்ளார். அது தாமதமாகவே, அப்துல் ரசித் சண்டையிட்டுள்ளார். … Read more

சீறி பாய்ந்த கொம்பன்; விஜயபாஸ்கர் காளைக்கு தங்க நாணயம் பரிசு வழங்கிய உதயநிதி

சீறி பாய்ந்த கொம்பன்; விஜயபாஸ்கர் காளைக்கு தங்க நாணயம் பரிசு வழங்கிய உதயநிதி Source link

உதயநிதி ஸ்டாலினுடன் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட தமிழ் நடிகர்.! 

விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க இன்று மதுரை அலங்காநல்லூர் வந்தடைந்தார். அப்போது, மதுரையில் இருக்கும் தனது பெரியப்பா மு.க அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார். இதன் பின் அலங்காநல்லூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார்.  இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த போட்டியில் பிரபல நடிகர் சூரியும் தற்போது … Read more

சோகம்..!! பட்டம் விடும் திருவிழாவில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி..!!  

தமிழ்நாட்டில் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தானில் மகரசங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகின்றது. குளிா்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்குவதையும், அறுவடை காலத்தை கொண்டாடும் விதமாகவும் உத்தராயணம் (தை மாதப் பிறப்பு) திருநாளைக் கொண்டாடுவா். மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து வானில் பட்டத்தை பறக்க விட்டு உத்தராயணம் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு உத்தராயணம் திருநாள், குஜராத் மாநிலம் முழுவதும் … Read more

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்: டிடிவி தினகரன்

சென்னை: ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும். தமிழ்நாடு … Read more

திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு – வெளுக்கும் சீமான்

வேங்கைவயல் நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி-க்கு மாற்றியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. … Read more