ஆர்எஸ்எஸ் அமைப்பை முதலில் தடை செய்யுங்க… பாஜகவுக்கு தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் கோரிக்கை!

வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர் சுலைமான், பொதுச் செயலாளர் அப்துல்கரீம், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம் அவர்களிடம் கூறியது: இந்திய நாட்டில் அனைவருக்கும் சமநீதி, சம உரிமை என்பதை அரசியல் … Read more

நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி; அதிர்ச்சியடைந்த மக்கள்!

கன்று குட்டிகள்  குறைபாடுகளுடன், இரு தலைகள், மூன்று தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கண்கள், வாய் ஆகியவற்றுடம் பிறக்கும் சம்பவங்களை நாம் கேட்டிருப்போம். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் கால்கள் இல்லாமல் கன்று குட்டி பிறந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே உள்ளது பழங்கூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன் (55) கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டு,  10த்துக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து வளர்த்து … Read more

திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி முஷ்ரப் என்ற இளைஞர் உயிரிழந்தார். காளையை அடக்கும்போது படுகாயமடைந்த இளைஞர் முஷ்ரப் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

ஈரோடு : வடமாநில இளைஞர்களை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த கும்பல்.!

சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.  அந்தவகையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதீர் மற்றும் திலீப் உள்ளிட்டோர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் தங்கி அருகிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.  இந்த நிலையில், ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடந்த 14-ந் தேதி சுதீர் மற்றும் திலீப் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் … Read more

ஈரோட்டில் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல்.. அமலுக்கு வந்தது நடத்தை விதிகள்..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து 3 வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியையும் அவர் வெளியிட்டார். அதன்படி, காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் … Read more

மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் ஆர்வம் காட்டும் அளவுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கான யூபிஎஸ்சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டுவதில்லை” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.01.2023) தொழிலாளர் நலன் … Read more

பாடம் நடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்கள்: அரசு பள்ளியில் அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வதாகவும், பாடம் நடத்தமால் செல்போனில் ஆசிரியர்கள் கேம் விளையாடி வருவதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி … Read more

மாமியார் வீட்டில் இருந்து நைசாக பேசி அழைத்து வந்து கொடூரம்; இரும்பு கம்பியால் அடித்து மனைவி கொலை: சடலத்தை வீட்டில் பூட்டி விட்டு போலீசில் சரணடைந்த கணவன்

ஸ்ரீகாளஹஸ்தி: நடத்தை சந்தேகத்தால் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை நைசாக பேசி அழைத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்று சடலத்தை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கணவர் போலீசில் சரணடைந்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (25). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கிருத்திகா என்ற மகளும் விக்னேஷ்வர் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் என்டிஆர் நகரில் வாடகை வீட்டில் … Read more

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில், இந்த போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது. இந்த நிலையில், … Read more