தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் அம்மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தலைமை செயலக கட்டிடத்துக்கும், சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி … Read more

மாணவியை ஆபாசமாக படம் எடுத்த ஊழியர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த பள்ளி முதல்வர்!

திருவேற்காட்டில் பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்த தனியார் பள்ளி ஊழியர், பள்ளி முதல்வரின் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக அயனம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் (என்ற) எட்வின் (21) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், தினமும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்த பள்ளியின் முதல்வர், சந்தேகத்தின்பேரில் அந்த நபரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது சசிகுமார் … Read more

காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலனுடன் மகள் ஓடியதால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் செட்டிமலன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை (49). இவருடைய மனைவி சங்கரம்மாள்(38). இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் இவர்களது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம், இவர்களது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சின்னதுரை, மனைவியிடம் இனிமே எப்படி வெளியே … Read more

500 பெண் ஆட்டோ ஓட்நர்களுக்கு ரூ. 1 லட்சம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்நர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை, தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று (ஜன.24-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்’, உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்திட ஒப்புதல் வழங்கப்பட்டது. … Read more

வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிக்கும் மேல் வருமானம்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிக வரி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், கடந்தாண்டு மார்ச்மாதம் இறுதியில் கிடைத்த வருவாயானது, இந்தாண்டு ஜன.24-ம்தேதிக்குள் … Read more

அடம்பிடிக்கும் எடப்பாடி… டெல்லி போட்ட பலே ஸ்கெட்ச்… ஈரோட்டில் பெரிய சிக்கல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஒதுங்கி கொண்டது. இது எங்கள் தேர்தல் இல்லை என்று கூறியுள்ள அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம். கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எங்களுடையது 2024 மக்களவை தேர்தல் மட்டுமே. இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவின் ரூட் கிளியர் ஆனது. அதிமுகவில் இரண்டு வேட்பாளர்கள்ஆனால் உட்கட்சி பூசலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு Source link

திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.. வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு..!

சமரச பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், 30 மற்றும் 31-ம் தேதிகளில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் … Read more

உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் 2 வாரத்தில் தாக்கல்: ராமஜெயம் கொலை வழக்கில் தீவிரம்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு … Read more

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு: நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வாதம்!

நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் … Read more