மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதலாம்: பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதத் தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப். 23, 24-ம் தேதிகளில் தேர்வர்களுக்கு … Read more

இடைத் தேர்தல்: ஒதுங்கிக்கொண்ட தமாகா – எடப்பாடிக்கு முதல் வெற்றி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு … Read more

'நாம் யாருடைய வாரிசு? நடிகர் விஜயின் வாரிசு என சொல்லிவிடாதீர்கள்’- கலகலத்த செல்லூர் ராஜூ

“சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி ஸ்டாலின்” என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ”எம்ஜிஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் … Read more

பாலியல் புகார்… பாஜக எம்.பி.க்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக போராட்டம் வலுத்து வருகிறது. இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள், பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. இந்த … Read more

சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ராஜபாண்டியன். இந்த நிலையில் பாண்டியனின் சகோதரி அய்யம்மாளுக்கும் பாண்டியனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல்  தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர் களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை அடித்து … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட சம்மதம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அதிமுக போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம்.யுவராஜா … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்: புகழேந்தி பரபர தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும், அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் தேர்தல். ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் வசம் ஒப்படைத்துவிட்டனர். அதிமுக தரப்பில் தான் சிக்கல் நீடித்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். எடப்பாடி தரப்பு … Read more

Happy Pongal 2023: கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா! பொங்கல் தீர்த்தவாரி

Happy Pongal 2023 Last Day Celbrations: தமிழர் திருநாள் தை மாதம் தொடங்கி நடைபெற்று வந்த பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்தன. பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தென்பெண்ணை ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  தைத்திருநாள், இயற்கைக்கு நன்றி … Read more

முற்றும் மோதல்… ஆளுநருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட காங்கிரஸார்!

தமிழ்நாடு ஆளுநர் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் `தமிழ்நாடு அரசியல் சட்டத்திற்கு புறம்பாகவும் மத்திய அரசிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம்’ எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், மாவட்ட தலைவர் … Read more