குடிநீரில் மனிதக்கழிவு கலந்த வழக்கு 149 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர்நீதிமன்ற கிளையில் அரசு தகவல்

மதுரை: குடிநீரில் மனிதக்கழிவை கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 149 பேரிடம் சாட்சிய விசாரணை நடந்துள்ளதாகவும் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் பின்பற்றப்படும் தீண்டாமை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யவும், இக்குழுவின் ஆய்வு அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மனிதக் கழிவு கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டவர்களின் … Read more

காணும் பொங்கலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.! 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பனந்தாள் அருகில் சோழபுரம் வானம்பாடி பகுதியில் வசித்து வரும் சந்திரா அறிவழகன் தம்பதிக்கு 13 வயதில் நித்திஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களது ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், நிதிஷ் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டான். அதன் பின் சற்று நேரத்தில் பலூன் உடைக்கின்ற போட்டி நடைபெற்றுள்ளது. இதை வேடிக்கை … Read more

ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டி என அறிவிப்பு

ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் போட்டி என அறிவிப்பு Source link

திருப்பூர் எஸ்டிபிஐ பேரணி, பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: திருப்பூரில் ஜன.22-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி எஸ்டிபிஐ கொடுத்த மனுவை நிராகரித்துவிட்டதாக கூறிய அரசு தரப்பு வாதத்தை ஏற்று, இந்நிகழ்வுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்தாண்டு மத்திய அரசு பாப்புலர் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 வருட காலம் தடை செய்து … Read more

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு பிளேடால் கழுத்தை அறுத்து தம்பதி தற்கொலை முயற்சி

பல்லடம்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன்-மனைவி கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டர் திருட்டு சம்பவம் நடந்தது. இதை திருடியதாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் கருப்புசாமி (29) என்பவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 45 நாட்கள் சிறையில் இருந்த கருப்பசாமி நிபந்தனை ஜாமீனில் … Read more

மதுபோதையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்.. பதற்றம் அதிகரிப்பால் போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மதுபோதையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம், அங்கு மதுபோதையிலிருந்த ஜீவா வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விக்ரம் மற்றும் ரமேஷ், தங்களது ஆதரவாளர்களுடன் சென்று மூங்கில்துறைப்பட்டில் இருந்த குடிநீர் குழாய், பாத்திரங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது. தகவலின்பேரில் விரைந்த மூங்கில்துறைப்பட்டு … Read more

காணும் பொங்கல் முடிந்த பிறகு மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்க டெண்டர் விட்ட சென்னை மாநகராட்சி

சென்னை: மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகை காலங்களில் தடுப்புகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள பொங்கல் முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. இது சர்ச்சையானதைத் தொடர்ந்து நிர்வாகக் காரணம் என்று டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகத்துடன் கொண்டாடடுவார்கள். பலரும் குடும்பத்துடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டுவார்கள். குறிப்பாக … Read more

பட்டியலின மக்களை மறந்த திருமா? பிக்பாஸ்க்கு வாக்கு சேகரிப்பு.. கொதிக்கும் நெட்டிசன்கள்

ள்புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் குற்றம் சுமத்துவதாக பரபரப்பான … Read more

கருத்து வேறுபாடு இருந்த நிலையில் ஒன்றிய அரசால்தான் அதிமுக ஆட்சி நீடித்தது: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: ‘ஒன்றிய அரசு உதவியால்தான் அதிமுக ஆட்சி 4 ஆண்டு நீடித்தது’ என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார்  நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்று தான். அதில்  வித்தியாசம் ஒன்றும் இல்லை. பாஜ மக்களவை தேர்தல் பணியை துவங்கி விட்டது. ஒன்றிய அமைச்சர் விகே சிங் வருகிற 27, 28, 29 தேதிகளில் வருகிறார். … Read more

கொலிஜியம் விவகாரத்தில் நான் கடிதம் அனுப்பியதை பிரச்சினையாக்குவது சரியல்ல: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுச்சேரி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் விஷயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தை பலரும் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்குகின்றனர் என்று புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வழக்கறிஞர்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்நிகழ்வில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை வகித்து அடிக்கல் நாட்டி … Read more