பிரபாகரனை புகழ்ந்து பேசுவது குற்றமல்ல.. உயர்நீதிமன்றம்..!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாளையொட்டி, சென்னை சின்மயா நகரில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்த அனுமதி கோரி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கோயம்பேடு காவல்துறையினர், ‘தடை செய்யப்பட்ட இயக்கத்தையோ, அதன் தலைவர்களையோ புகழ்ந்து பேசக்கூடாது. நிகழ்ச்சி அனைத்தையும் வீடியோ பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காலை 10 மணி முதல் … Read more

உதயநிதியின் துறையை கவனிக்கும் உதயச் சந்திரன்: முதல்வரின் தனிச் செயலர்களுக்கு கூடுதல் துறைகள்

சென்னை: முதல்வரின் தனிச் செயலாளர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் 4 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச் சந்திரன் ஐஏஎஸ், 2-வது தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 3-வது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 4-வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் கவனிக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில், 4-வது தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வரும் 23ல் தேமுதிக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் … Read more

ஈரோடு: விவசாய நிலத்தில் கிடந்த புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம்! வழிபாடும் நடத்தும் மக்கள்

சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் பழமை வாய்ந்த பண்டைய கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்ட வேலையின்போது தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடுகல் மற்றும் நந்தி சிலைகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதை கண்ட முனுசாமி, … Read more

ஐசிசி தரவரிசை…கோலி முன்னேற்றம்!!!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர்கள் கோலி, சிராஜ் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது இடத்துக்கு முன்னேறினார்.   பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்ரிக்க … Read more

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல் நலக்குறைவால் காலமானார்

மதுரை, விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கிற பாப்பா உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயார் உயிரிழந்ததாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தனது தாய் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பா.ம.க. எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தனர் என்றும் வடிவேலு தெரிவித்தார். Source link

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைவில் பதிலளிக்கப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்குப் பிறகு, குடியரசுத் … Read more

கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் சென்ற தமிழ்நாடு: ஓபிஎஸ் வருத்தம்!

வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கல்வியறிவு பெற வேண்டும். மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத … Read more