இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான் – ஹெச் ராஜா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்ராமையா உள்ளிட்டோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.

“முதல்வர் ஸ்டாலினை பணியவைத்தது இந்து எழுச்சியே” – வானதி சீனிவாசன்

கோவை: “தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது,” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டத்துக்கு ஆளான வனத்துறை அமைச்சர் பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்று … Read more

அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு, திருமண முன்பணம் அதிகரிப்பு: முதல்வரின் 9 முக்கிய அறிவிப்புகள் என்ன?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் … Read more

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்கள் 200 பேர் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை … Read more

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 … Read more

“தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய … Read more

“வெறுப்பு அரசியலின் மூலதனமே திராவிட இயக்கங்கள் தான்!” – ஹெச்.ராஜா

மதுரை: வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு … Read more

செந்தில் பாலாஜிக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு – ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு

புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் … Read more

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் … Read more

மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்… பால்வளத்துறை ஒதுக்கீடு!

Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.