விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் உள்பட இருவர் பலி; 7 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லீசுக்கு … Read more

எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி… ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 04, 11, … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டி – கே.எஸ்.அழகிரி தகவல்

ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ” இந்திய அரசின் பிரதிநிதியாக … Read more

வெள்ளகோவில் அருகே விஷம் கலந்ததாக புகார்: பொது கிணறு தண்ணீர் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்பு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே விஷ மருந்தை கலந்ததாக கூறப்படும் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதனைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உப்புப்பாளையம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (56). விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் திறந்து விடும் பணியையும் செய்து வருகிறார். கடந்த 16ம் தேதியன்று கிணற்றில் மோட்டார் போட சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (59), அவரது மனைவி … Read more

‘தாய் மொழியில் வாதாடினால் விரைவில் தீர்ப்பு கிடைக்கும்’: தமிழிசை நம்பிக்கை

‘தாய் மொழியில் வாதாடினால் விரைவில் தீர்ப்பு கிடைக்கும்’: தமிழிசை நம்பிக்கை Source link

#பெரம்பலூர் : கோவில் ஆம்ப்ளிஃபையர் திருட்டு.. சிசிடிவியில் அதிர்ச்சி.! 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் எனும் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகே வைத்திருந்த ஆம்ப்ளிஃபையர் மற்றும் மைக் செட் என்று காலை நேரத்தில் காணாமல் போயுள்ளது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் திருடிய இரண்டு நபர்களில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.  மற்றொருவர் சுரேஷின் நண்பர் சந்துரு என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் … Read more

நடிகருடன் நடனமாடிய துணை முதல்வரின் மனைவி!…

மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவி அரசு பங்களாவில் நடிகருடன் நடனம் ஆடி, வீடியோ எடுத்ததற்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில், பா.ஜ.க. தலைவர் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி வகிப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில், மீட் பிரதர்ஸ் சார்பில் இசையமைக்கப்பட்ட, மூட் பனா லியா என்ற பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு அவர், … Read more

வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ … Read more

சூப்பர் சரவணா ஸ்டோர் வழக்கு: மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே … Read more

ரேஷன் அரிசி மூட்டைகள் தண்ணீருக்குள் வீசிய விவகாரம்: எமரால்டு அணையில் மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி நேரில் விசாரணை

ஊட்டி: ஊட்டி அருகே எமரால்டு அணையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வீசப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி அருகே … Read more