தேரூரில் அறுவடை தொடங்கியது: கேரளாவிற்கு செல்லும் குமரி வைக்கோல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. ஆற்றுபாசனம், குளத்து பாசனத்தை நம்பியே இந்த சாகுபடி நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுக்கும் நேரத்தில் மகசூல் அதிகரிப்பதுடன், லாபமும் அதிகமாக கிடைத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது கும்பபூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இருவருடமாக தேரூர் பகுதியில் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் இருந்தனர். அந்த பகுதியில் வால்ெநல் என்னும் களைமுளைப்பதால், சாகுபடியை புறக்கணித்து வந்தனர். இந்த வருடம் மீண்டும் நெல்சாகுபடியை … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! இருவர் பலி, 7 பேர் படுகாயம்!

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உள்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டை அடுத்த கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை, விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் குதைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.  இந்த ஆலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பனி செய்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆலையில் இன்று … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் அறிவிப்பு 2021-ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கீடு Source link

தயாராகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்: சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயார் செய்வதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பிரநிதிகள் தயார் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. எனவே, மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர். கடந்த 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. … Read more

குளம், டீக்கடை, கோவில் எங்கிலும் தீண்டாமை.. புதுக்கோட்டையில் அவலம்

வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “புதுக்கோட்டை வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை … Read more

மூணாறில் தொடர்ந்து ஹாரன் அடித்து ‘படையப்பா’ யானைக்கு தொல்லை: டாக்சி டிரைவர் மீதுவழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இருப்பினும் யாருடைய உயிருக்கும் இதுவரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் அடிக்கடி ஊருக்குள் வந்து கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு செல்வது இந்த யானையின் வழக்கம். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் ‘படையப்பா’ யானையை விரட்டி காட்டுக்குள் விட்டனர். ஆனால் எத்தனை முறை காட்டுக்குள் விரட்டினாலும் … Read more

வெறுப்புப் பேச்சைத் தடுக்க சட்டம்; மத்திய அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

வெறுப்புப் பேச்சைத் தடுக்க சட்டம்; மத்திய அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை Source link

2 பேருடனும் சுற்றியதால் ஆத்தரம்…காதலியை தாக்கிய காதலர்கள்!!

2 பேருடன் சுற்றிய காதலியை கண்மூடித்தனமாக தாக்கிய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் பெடல் மாவட்டத்தில் போர்தேஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த காதலரை, இளம்பெண்ணின் முன்னாள் காதலர் சந்தித்து உள்ளார். இதில், தன்னை காதலித்த அந்த பெண் தொடர்ந்து பேசாமல் தவிர்த்து வந்தது தெரிந்ததுடன், மற்றொரு புது காதலருடன் சுற்றி திரிந்த விவரம் அறிந்து முன்னாள் காதலர் ஆத்திரம் அடைந்து உள்ளார். … Read more

மத்திய அரசிடம் நிலுவையிலுள்ள 3 கோரிக்கைகள்: கிரண் ரிஜிஜுவிடம் மனு அளித்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: மத்திய அரசிடம் கோரி நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து, சட்டப் பள்ளிக்கு நிதி, உயர் நீதிமன்றக் கிளை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனு தந்தார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பல முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்த தொடங்கியுள்ளார். இச்சூழலில் புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் … Read more